ஒடுக்குமுறைகள், அடக்குமுறைகள், தீண்டாமை பிரச்சினைகள் கடந்த நூறாண்டு காலமாக விவாதிக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு, அதில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தையும் கொண்டு-வந்தாகிவிட்டது. இவை எதுவுமே சமகாலத்தில் நேரடி வடிவத்தில் இருப்பதில்லை. கிராமப்புறங்களில் நேரடி வடிவங்களில் இன்னமும் உயிர்ப்போடு இருக்கும் தீண்டாமை மட்டுமே சமூகப் பிரச்சினையாகப் பேசுபொருளாகியிருக்கிறது. பண்பாட்டு அளவிலும் பொதுப்புத்தியிலும் படிமமாக உறைந்துபோயிருக்கும் ஆதிக்க மனோபாவங்கள் பலருக்கும் புரிவதில்லை அல்லது அதற்கான தேவை அவர்களுக்கு இல்லை.
இம்மாதிரியான பிரச்சினைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் சுட்டிக்காட்டும்போது அதைக் குதர்க்கவாதமாகக் கருதி மறுக்கும் போக்கு மிக சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது. சமூக அமைப்பும் மக்களும் இயல்பாகவே காலத்தால் மாறக்கூடியவர்கள். தேவையின் பொருட்டு நிகழும் மாற்றங்களை மறுப்பதற்கில்லை. ஆனால் அதையே சமூக மாற்றமாகக் கருத முடியாது. எடுத்துக்காட்டாக, சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் வழக்கம் கடந்த முப்பதாண்டுகளில் நகரம்தொட்டு கிராமம்வரை சேர்ந்திருக்கிறது. சிலிண்டரை முதுகில் சுமந்து நம் வீட்டுக்குள் வைத்துவிட்டுப் போகும் ஊழியரிடம் யாரும் சாதி பார்ப்பதில்லை. சாதியைச் சந்தேகித்து அந்த ஊழியரை வாசலிலேயே நிற்கவைத்தால் அந்த சிலிண்டரின் சுமையைச் சாதி பார்ப்பவர் சுமக்க வேண்டியிருக்கும். எனவே ‘சாதி பார்க்காத’ இந்த மாற்றம் மனமாற்றமல்ல, வசதிக்கான அனுசரிப்பு. அவ்வளவுதான்.
இது ஒரு நடைமுறை உதாரணம் மட்டுமே. இதைப் போலப் பொருளாதாரத் தேவைக்காகவும் தொழிலுக்காகவும் நம் சொந்த நலன்களுக்காகவும் ‘தாராளமயமான’ மனிதர்களாக மனித குலம் மாறியிருக்கிறது. சிவில் வாழ்க்கைத் தேவைக்காகவும் அரசியல் சரிநிலைக்காகவும் (Political Correctness) மாறிய இந்தச் சமூகம் வேறு எங்கெங்கெல்லாம் தன் பொதுப்புத்தியை வெளிப்படுத்துகிறது அல்லது கவனக்குறைவாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டத் தலைப்பட்டிருக்கிறோம்..
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then