இன்று உலகம் முழுவதும் சாதாரண ஏழை மக்களை அடிமைப்படுத்த மூன்று விதமான வழிமுறைகளை ஆதிக்க வர்க்கத்தினர் பின்பற்றுவதாகச் சமூக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அவற்றை மூன்று ‘P’ (Populism, Polarization and Post-truth) என்று குறிப்பிடுகின்றனர். அதனை இந்தியச் சூழலில் விளக்க முயல்கிறேன்.
ஜனரஞ்சகவாதம் அல்லது பிரபலவாதம் (Populism): அடித்தட்டு மக்களிடம் பிரபலமடைவதற்காக இலவசத் திட்டங்களை அறிவிக்கிறது அரசு. இதனால் அடித்தட்டு மக்கள் சிறிது பயனடைகின்றனர் என்றாலும், இவர்களை அதிகம் பாதிக்கும் வேலையின்மை, வறுமை, குடிப்பழக்கம் போன்றவற்றை ஒழிக்க அரசு முயலவில்லை. இத்தகைய அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து அரசின் ஜனரஞ்சகமான இலவசத் திட்டங்கள் மக்களைத் திசை திருப்புகின்றன.
துருவப்படுத்துதல் (Polarization): ஆதிக்க வர்க்கத்தினர் தாங்கள் சொல்வதுதான் சரி என்று மக்களை நம்பச் செய்து, மாற்றுக் கருத்து உடையவர்கள் அனைவரும் பொய்யர் என்று மக்களை இரண்டாகப் பிரித்து அவர்களிடையே தொடர்ந்து சண்டையை மூட்டுவது. உதாரணம்: தற்போதைய பாரதிய ஜனதா அரசு தங்களது கருத்துதான் இந்தியாவின் கருத்து என்றும், மாற்றுக் கருத்துள்ளோர் அனைவரும் இந்தியாவுக்கு எதிரானவர்கள், நகர்புறத் தீவிரவாதிகள் என்றும் துருவப்படுத்தி மக்களைப் பிரிக்கிறது.
பிந்தைய உண்மை (Post-truth): பொய்யை உண்மை எனத் தொடர்ந்து கூறி, அதை நியாயப்படுத்தி உண்மையாக்குவது. உதாரணம்: பாரதிய ஜனதா அரசு ராமர் சரித்திர நாயகர், ராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையே ராமர் கட்டிய பாலம் இன்றும் உள்ளது, ராமருக்குக் கோயில் கட்டினால் நாடு செழிக்கும் என்று தொடர்ந்து பொய்யைப் பேசி அதையே உண்மையாக்குகின்றனர். வலைத்தளங்கள் மூலமாகவும் இச்செய்திகளைத் தொடர்ந்து பரப்புகின்றனர்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then