வழக்கத்திற்கு மாறாக
காகிதக் கொக்குகளுக்குப் பதிலாக
ஓர் காகித யானையைச் செய்து
வானத்தில் பறக்கவிட்டேன்.
அதன் எடையைப் பற்றியோ
கீழே விழுமென்றோ
நாம் ஒருபோதும் கவலைப்படுவதில்லை
அடுத்து வரும் காற்று
அதை மேல்வானத்திற்குக் கொண்டுசெல்லும்.
ஒரு காகித வானம் மட்டும் போதும்
எல்லாப் பறவைகளையும் போல
எல்லா விலங்குகளும்
வானெங்கும் பறந்து போவதற்கு.
காகித வானம் மட்டும் போதும்
- இலட்சுமண பிரகாசம் | ஓவியம்: ஸ்ரீதர்