ஊரிலிருந்து காத்தவராயன் புறப்பட்டபோது குளிர்காலப் பனியில் நமுத்திருந்த அவர்களின் செம்புலம் கோடையை எதிர்கொள்வதற்கு அணியப்பட்டுக் கொண்டிருந்தது. தாவர இனங்கள் இலைகளை உதிர்த்து வாடத் தொடங்கியிருந்தன. செம்மண் பாதைகள் காற்றில் புழுதிவீசக் காத்திருந்தன.
அவன் வேண்டாமென்று சொன்னான். அதைக் கேட்காமல், ரயில் ஏற்றி விடுகிறேனென்று அப்பாவும் நடந்தார். குன்றுகள் சு+ழ்ந்த துக்கன்குட்டையைக் கடந்து, மேட்டுநிலங்களுக்கு இடையில் செல்லும் தார்ச்சாலையில் காலையிலும் மாலையிலும் ஒரேயொரு பேருந்து தடதடத்துச் செல்லும். அதன் சத்தத்தை மின்கம்பிகளில் உட்கார்ந்திருக்கும் மைனாக்களும் சட்டை செய்வதில்லை.
நடுவாந்தரத்தில் புறப்பட்டதால் மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டியிருந்தது. அப்பா பேச்சை நிறுத்தவில்லை. எங்கே தன் வாயைப் பறித்து, நடந்தவற்றையெல்லாம் சொல்லச் செய்துவிடுவாரோ என்று காத்தவராயன் அச்சம் கொண்டான். வழக்கமாக அவன் ஆண்டுக்கு இரண்டு முறை ஊருக்கு வருவான். ஆனால் இம்முறை அவன் வந்திருந்தது வழக்கத்துக்கு மாறாக அவருக்குத் தோன்றியது. அப்பா விவரமானவர். எதையாவது ஊகித்திருப்பார். காத்தவராயன் நம்பினான்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then