நரைத்த தலைமயிரும்
உறக்கமற்றுச்
சிந்தித்துச் சிந்தித்துச்
சிவந்த கண்களுமாய்ச்
சுற்றித் திரிந்தான்
கம்பீரமாய்த் தோன்றினாலும்
உள்காயங்களுடன் உலவினான்
பெருங்கூட்டத்தில் தனித்தவன்
துணைக்காகப் புகையைப் பற்றினான்!
புகைத்துப் புகைத்து
கருத்த உதடுகளும்
பகைத்தன அவனை!
பாப்பாவைப் பார்த்ததும்
பேருவகையில் பறந்தான்
மரணம்வரை மாறாததென
அவன் நம்பியதை
மாற்றினாள் அவள்
சிவந்த உதடுகளும்
கருத்த மயிர்களுமாய்
புதிதாய்ப் பிறந்தான்
