“நீ இருக்கும் இடத்தைக் கடந்து ஒரு உலகம் உள்ளது… அதை நோக்கிச் செல்லும் தகுதி உனக்கு உண்டு”
“நீ இங்கிருந்துதான் வந்தாய்… இது உன்னுடைய இடம்”
இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் ஒரு மெல்லிய வித்தியாசமே உண்டு. ஆனால், அந்த வித்தியாசம் உறுதியானது. நரம்பின் உறுதியைப் போன்றது. இந்த வித்தியாசத்தைக் கண்டுகொள்ள ‘Queen of Katwe’ படத்தினைப் பார்க்க வேண்டும்.
இந்தப் படம் 2016இல் வெளிவந்தது. இது உகாண்டா நாட்டுத் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்கிவர் இந்திய அமெரிக்கத் திரைப்பட இயக்குநரான மீரா நாயர் ஆவார். இவர் இதனை நவீனக் காலத்திய உகாண்டா திரைப்படம் என்கிறார். உகாண்டா சொந்தமாகத் திரைப்படம் எடுக்க ஆரம்பித்தது 2005இல் இருந்துதான். அதற்கு முன்பும் இப்போதும் பெரும்பாலும் ஹாலிவுட் திரைப்படங்களை மொழிமாற்றம் செய்து வெளியிட்டுவருகிறார்கள்.
மீராவின் கணவர் மஹ்மூத் மம்தானி, உகாண்டா நாட்டைச் சேர்ந்தவர். மீராவுக்கு இந்தியா போலவே உகாண்டாவும் சொந்த நாடானது. டிஸ்னி நிறுவனத்தின் துணைத் தலைவரான டெண்டோ நாகேண்டாவுக்குத் தனது சொந்தத் தேசமான உகாண்டா குறித்துத் திரைப்படம் எடுக்க வேண்டுமென்பது ஆசை. அவர் பெரிய பொறுப்பில் இருந்தபோதும் உகாண்டா போன்ற நாட்டிலிருந்து என்ன மாதிரியான படம் எடுத்துவிட முடியும் என்பதும் அது வியாபார ரீதியாக எப்படி நிறைவளிக்கும் என்பதும் டிஸ்னியின் கேள்வியாக இருந்தது. “என்னிடம் எதைக் கதையாக எடுக்க வேண்டும் என்கிற யோசனை இருக்கிறது. இதனை மீரா இயக்கினால் சரியாக இருக்கும்” என்று மீராவைச் சந்திக்கிறார் டெண்டோ நாகேண்டா. மீராவிடம் அவர் சொன்ன கதைதான் ‘Queen of Katwe’. மீராவைப் பொறுத்தவரை, உகாண்டாவுடன் பல வருட உறவு இருந்தாலும் அந்தத் தேசத்தின் பின்னணியில் ஒரு படம் இயக்க முடியவில்லை என்கிற வருத்தம் இருந்தது. இருவரின் சந்திப்பும் இவர்களது நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டன.
காத்வே என்பது உகாண்டாவின் தலைநகரமான கம்பாலாவின் ஒரு பகுதி. மூன்று கிலோமீட்டர் தூரம் விரிந்திருக்கும் ஒரு குடியிருப்பு. சேரிப்பகுதி என்று சொல்லலாம். அன்றாடக் கூலிகளும் தெரு வியாபாரிகளும் வாழும் இடம். இங்கிருந்து ஒரு சிறுமி சதுரங்க ஆட்டத்தின் ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டத்துக்காகக் கனவு காண்கிறாள் என்பதே கதை, உண்மைக் கதையும் கூட.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then