144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மஹா கும்பமேளா நிகழ்ச்சி, உத்தரப் பிரதேச மாநிலத்தின், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெற்றது. உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான பார்வையாளர்களைக் கவரும் மிகப் பிரசித்திப் பெற்ற நிகழ்ச்சி இது. ஒன்றியத்திலும் மாநிலத்திலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் சூழலில், அக்கட்சியினர் மஹா கும்பமேளாவை மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதினர். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இதற்கு சுமார் ரூ.7,500 கோடி நிதி ஒதுக்கியிருந்தார். இறுதியாக 2013இல் கும்பமேளா நடந்தபோது, சமாஜ்வாதி கட்சி மாநிலத்தையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரதமராக மன்மோகன் சிங் ஒன்றிய அரசையும் நடத்திவந்தனர். அப்போது இந்நகரம் அலகாபாத் என்று அழைக்கப்பட்டது. இந்தியாவின் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடும் திருவிழாவாக இருப்பதால் போக்குவரத்தைக் கவனமாகத் திட்டமிடுவது, இவ்விழாவிற்குத் தயாராவதில் மிகவும் இன்றியமையாத பணி.
கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்த ஜனவரி 30ஆம் தேதியே கும்பமேளா நிர்வாகத்தினரால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. பக்தர்கள் வரும் பாதை ஒற்றை வழிச்சாலையாக மாற்றப்படும் என்றும், வாகனங்களின் நடமாட்டம் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. நிகழ்வின் முக்கிய நாட்களில், வி.ஐ.பி. பாஸ் நுழைவை ரத்து செய்வதாய் தெரிவித்தார்கள். ஆனால், இவ்வறிக்கை அனைத்தும் துன்பகரமான தள்ளுமுள்ளு சம்பவத்திற்குப் பிறகே வெளியிடப்பட்டன. மவுனி அமாவாசை அன்று (ஜனவரி 29) மஹா கும்பமேளாவின் மிக முக்கியமான சடங்கு நடைபெறும். அதில், சுமார் 10 கோடி பக்தர்கள் கலந்துகொள்வார்கள். கங்கை, யமுனை, மானசீக சரஸ்வதி நதி ஆகியவை சங்கமிக்கும் திருவேணி சங்கமத்தில், 1954ஆம் ஆண்டுக்குப் பிறகு கூட்டநெரிசல் தள்ளுமுள்ளு நடைபெறுவது இதுதான் முதல்முறை.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then