1
சில ஆயிரம் வருடங்களாக மனித சமூகத்தில் புழங்கும் கவர்ச்சிகரமான மாயாஜால வார்த்தை ‘உழைப்பு’. கடவுளுக்கு எதிரான விவாதங்கள் கூட மிக இயல்பாகச் சாத்தியப்படும் இன்றைய சமூகத்தில் ‘உழைப்பு’ எனும் புனித கருத்தாக்கம் மட்டும் யாரும் கேள்வி கேட்க முடியாத பீடத்தில் அமர்ந்திருக்கிறது. உழைப்பே அனைத்து வளர்ச்சியையும் சாத்தியப்படுத்தியது எனும் உறுதியான நம்பிக்கை நம்மில் பலரிடம் இருக்கிறது.
உழைப்பு பற்றிய முரண்நகை என்னவெனில், கருத்தியல் ரீதியாக முரண்படுவோரும் எந்த மறுப்புமின்றி ஏற்றுக்கொள்ளும் ஒரே விடயம் ‘உழைப்பு’ மட்டும்தான். எடுத்துக்காட்டாக, வலதுசாரிகள் மனிதர்கள் மிக அதிகம் உழைக்க வேண்டும் அப்போதுதான் முன்னேற்றம் வரும் என்கிறார்கள். இடதுசாரிகளோ, உழைப்பே அனைத்து வளங்களையும் சாத்தியப்படுத்தியது; அதுவே அனைத்திலும் முதன்மையானது எனும் வாதத்தை முன்வைக்கிறார்கள். ஆனால், இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும் இடையேயான முரண், உழைப்பு எனும் கருத்தாக்கம் மீது அல்ல. மாறாக, எவ்வுளவு நேரம் உழைக்க வேண்டும்; எவ்வுளவு கூலி பெற வேண்டும்; யாரிடம் அதிகாரம் இருக்க வேண்டும் என்பவனவற்றில் இருக்கிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then