75ஆவது சுதந்திர தினத்தை எப்படி அனுசரிப்பது? கொண்டாட்டம், பெருமை பேசுதல், இந்திய தேசியத்தின், தேச அடையாளத்தின் போதாமைகளை விமர்சித்தல், சிறப்பாக விரிந்த சுதந்திரக் கனவு துர்கனவாக மாறியதை எண்ணி மனம் துணுக்குறுதல் – இத்தகைய பார்வைகளைக் கடந்து வேறு வகைகளில் இந்தியச் சுதந்திரம் பற்றி யோசிக்க முடியுமா?
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் 1948ஆம் ஆண்டு உரையையும் அரசியல் சட்டத்தின் வரைவைத் தாக்கல் செய்து பேசுகையில் அவர் குறிப்பிட்டவற்றையும் நினைவுகூர்ந்து வேறொரு நோக்கு நிலையிலிருந்து இந்த 75 ஆண்டுகால வரலாற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.
“அரசின் அங்கங்களான சட்டசபை, நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றை அரசியல் சட்டம் சாத்தியப்படுத்தியுள்ளது. ஆனால், தங்களின் விழைவுகளையும் அரசியலையும் முன்னெடுத்துச் செல்ல மக்கள், அவர்கள் நிர்மாணிக்கும் அரசியல் கட்சிகள் ஆகியன மேற்கொள்ளும் செயல்பாட்டைச் சார்ந்துதான் இந்த அங்கங்களின் செயல்பாடு இருக்கும்… இருந்தாலும் ஒன்றை மட்டும் தெளிவாகச் சொல்ல முடியும். நாட்டின் நலனைக் காட்டிலும் தங்களின் சொந்தக் கருத்து நிலைக்கு அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் வழங்கினால் இரண்டாம் முறையாக நமது சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு ஆளாகும்; அதை நிரந்தரமாக இழக்கவும் கூடும்.”
அம்பேத்கரின் இந்தக் கூற்றைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகளின் வரலாறு, மக்களாகிய நாம் குறிப்பிட்ட காலகட்டங்களில் ஜனநாயகம் காக்க செய்தவை, செய்யாமல் விட்டவை, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, குறுகிய நலன்களுக்காகவும் சொந்த ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் அரசியல் தலைவர்களும் கட்சிகளும் – வலது, இடது, சாதியக் கட்சிகள், சாதியற்ற கட்சிகள் ஆகிய அனைத்துக் கட்சிகளும் – மேற்கொண்ட முடிவுகள், குறிப்பாக ஜனநாயக விரோதப் போக்குக்குத் துணை போன சம்பவங்கள் ஆகியவற்றை அலசி, ஆராய்ந்து அரசியல் சட்டம் உத்தரவாதம் செய்துள்ள ஜனநாயகம் நடைமுறையில் எவ்வாறானதாக இருந்து வந்துள்ளது என்பதைத் துல்லியமாக அடையாளம் காண வேண்டியுள்ளது.
அவசரநிலைக் காலத்தில் (1975) கட்சிகளின் நிலைப்பாடு, மண்டல் பரிந்துரைகளை ஒட்டி நிகழ்ந்த விவாதங்களில் பேணிய போக்கு, 1980கள் தொட்டு தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்தபோது அவற்றைக் கட்சிகள் எதிர்கொண்ட விதம், இதே காலகட்டத்தில் இடதுசாரி போராளிகளுக்கு எதிராக என்கவுண்டர்கள் நடந்தபோது கட்சிகள் சொன்னவை, சொல்லாமல் விட்டவை, 1984இல் சீக்கியர்கள் கொல்லப்பட்ட போதும், 2002இல் குஜராத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட போதும், மத்தியில் ஆட்சியில் இருந்த கட்சிகளுக்குச் சில மாநிலக் கட்சிகள் தெரிவித்த ஆதரவு, வடகிழக்கு மாகாணங்களிலும் காஷ்மீரத்திலும் நடந்துவரும் மனிதவுரிமை மீறல்கள், அரசு வன்முறை ஆகியவற்றைக் குறித்து கட்சிகளுக்குள்ள அரசியல் புரிதல், அக்கறை என்று பல விஷயங்களைப் பட்டியலிட்டு அவை குறித்து விவாதங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சமகால அரசியல் போக்குக் கவலையளித்தாலும் இதற்கான வரலாற்று ரீதியான காரணங்களை இனங்காண இத்தகைய அணுகுமுறை அவசியம் என்றே தோன்றுகிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then