தாராளவாதப் பெண்ணியமும் செக்குலரிசமும் – மா.க.பாரதி

Image Courtesy: rethinkingschools.org News

வதாராளவாதத்தின் வருகையும் இஸ்லாமியர்களுக்கு எதிரான சொல்லாடல்களின் பெருக்கமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.

இஸ்லாமியர்களை மற்றமையாகக் கற்பனை செய்து தமது தன்னிலையை வடிவமைக்கும் தேசியவாதப் பார்வைக்குத் தாராளவாதப் பெண்ணியமும் துணைபுரிகிறது. பெண்களைப் பண்டமாகக் கட்டமைக்கும் முதலாளிய இனவாதக் கோட்பாடுகளை எதிர்த்துக் கேள்விகேட்க வேண்டிய பெண்ணியம் இத்தாராளவாதக் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்றச் சொல்லாடலை உருவாக்குகிறது. இச்சொல்லாடலை ஃபெமோநேஷனலிசம் என்று சாரா ஃபெர்ரிஸ் குறிப்பிடுவார்.  தொண்ணூறுகளுக்குப் பிறகு ’பிற்போக்கான’ இஸ்லாத்தை மற்றமையாகக் கொண்டு முற்போக்குத் தாராளவாத செக்குலர் சமயங்களாகக் கிறித்தவமும் இந்துமதமும் மேற்குலகிலும் இந்தியாவிலும் கட்டமைக்கப்பட்டன.

காலங்காலமாக இஸ்லாமியப் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு வந்ததாகப் புதிய கதையாடல் ஒன்று  எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் பரப்பப்பட்டது. முதலாம் உலக நாடுகளின் ‘விடுதலை’ பெற்ற கிறித்தவப் பெண்களும் இந்தியாவில் ‘விடுதலை’ பெற்ற உயர்சாதி இந்துப் பெண்களும் இச்சொல்லாடலின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் இஸ்லாமியப் பெண்களைக் காட்டுமிராண்டித்தனமிக்க இஸ்லாமிய ஆண்களிடமிருந்து பாதுகாக்கும் மீட்பராகத் தம்மைக் கருதிக்கொள்ள இச்சொல்லாடல் பயன்பட்டது. இச்சொல்லாடல் பல்வேறு விதங்களில் விமர்சிக்கப்பட்டும் அதன் அடிப்படைகள் கேள்வி கேட்கப்பட்டும் வந்துள்ளது. செக்குலரிசத்தின் வரலாற்றை  ஆராய்ந்தால் நேர்மறையாக அதைப் பெண்ணியத்துடன் தொடர்புபடுத்த பேரளவு இயலாது. பால் பாகுபாட்டையும் அதன் அடிப்படையிலான பாலினப் பாத்திரங்களையும் (Gender Roles) அறிவியல் மூலம் செக்குலரிசம்  நிலைநிறுவியது. எனினும் இன்றைய நவதாராளவாதம் இவ்விரண்டையும் ஒன்றோடொன்று இணைத்து அதனடிப்படையில் இஸ்லாமோபோபியாவைக் கட்டமைக்கிறது. இவ்வரலாற்றின் சில அம்சங்களை இக்கட்டுரை விளக்கத் தலைப்பட்டுள்ளது. மேலும், இடதுசாரிப் பெண்ணியம் எவ்வாறு தாராளவாதப் பெண்ணியத்துக்கு எதிரான தொரு நிலைப்பாடு எடுத்துள்ளது என்பதை விளக்கும் இக்கட்டுரை, இந்தியாவில் சமீப காலங்களில் வெளிப்படும் முஸ்லிம் பெண்களின் களச்செயல்பாடுகளை இக்கட்டுரையின் பின்னணியில் புரிந்துகொள்வது உண்மையில் நாம் அனைவரும் ஏன் புரட்சிகரப் பெண்ணிய இயக்கங்களோடு பணிபுரிய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

பிக் பேங் தியரி: மனிதகுல நீட்சி

பிக் பேங் தியரி என்ற பெரும் புகழ் பெற்ற அமெரிக்க சிட்காம் தொடரில் ‘The Donation Oscillation’ என்ற அத்தியாயத்தில் ஒரு காட்சி வரும். லெனார்ட்  குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அதற்கு அவனது மனைவி  ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் தனது விந்தணுவை வேறொரு நண்பருக்குத் தானம் தருவதாகக் கூறுகிறான். இது பற்றித் தனது நண்பனிடம் பேசும்போது, ‘Penny doesn’t want to have kids. I respect that. But this is a chance to leave a part of me behind’ என்று கூறுகிறான். ஆசைகள், உணர்வுகள், சிந்தனைகள் என்று  அனைத்துக்கும் வரலாறு உண்டு. எதிர்காலம் பற்றியும் சந்ததியினர் பற்றியும் தம்மில் ஒரு பகுதியை இவ்வுலகத்துக்கு விட்டுச் செல்வது பற்றியும் இப்படிச் சிந்திப்பதற்குப் பின் சுவாரஸ்யமான ஆழமான வரலாறு உண்டு. அந்த வரலாறு கடவுளையும் மதத்தையும் பற்றியது. பெண்களையும் அவர்களது சமூக இருப்பையும் பற்றியது. செக்குலரிசத்தையும் தேச அரசையும் பற்றியது. தேசியவாதம் பற்றிப் பேசும்போது சுதிப்தா கவிராஜ் ’தேசியத்தை ஒரு வரலாற்று எதார்த்தமாகப் பார்க்க வேண்டுமானால் தேசியம் தமக்குத் தாமே வழங்கிக் கொள்ளும் வரலாற்றிலிருந்து  வெளிவர வேண்டும்’ என்பார். ஐரோப்பிய வரலாற்றின் மணிமுடியாகச்  செக்குலரிசத்தைச் சொல்வார்கள். கவிராஜ் சொல்வது போல தமக்குத் தாமே பாராட்டுச் சான்றிதழ் கொடுத்துக்கொள்ளும் செக்குலரிசத்தின் இந்த நேர்கோட்டு வரலாற்றிலிருந்து துண்டித்துக் கொண்டால்தான் உண்மையில் அதன் பங்கு என்ன என்பதைப் புரிந்துகொள்ள இயலும்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!