(அந்த உலகம்:
கோடுகள் என்னோடு பேசுபவை. கோடுகள் என்னோடு கொஞ்சுபவை… உலகம் கோடுகளாலானது என்றே நினைத்திருந்தேன். சதுரம், முக்கோணம், செவ்வகம், கனசதுரம், அறுகோணம், எண்கோணம், ஏன் வட்டங்கள் கூட கோடுகளாலானவை. அத்தனை நேர்கொண்டதா உலகம், இல்லை. வளைவும் நெளிவும் சுளிவும் கோடுகள்தாம். வளைகோடுகள் என் கண்களுக்குத் தெரியும். நான் இந்த உலகத்தைக் கோடுகளால் பார்ப்பவன். நானே ஒரு கோடு.)
“ரோட்ல நாய் மாரி அடிபட்டுச் சாகணும், அவ்ளோதான் என் ஆசை.”
வன்மமில்லை, கோபமில்லை, ஒரு மூர்க்கம்… அதுதான் அவனைச் சுற்றி எப்போதும் அனலைப் போல் சுழன்றுகொண்டிருந்தது. அவனது எல்லா நடவடிக்கைகளிலும் இதன் சாயல் தெரியும். சில அபூர்வ வேளைகளைத் தவிர பேச்சிலும் இந்த வெப்பம் வீசிக்கொண்டேயிருக்கும். வெளிமனிதர்களிடம் மட்டும்தான் இப்படியா என்று கணிக்கும் அளவிற்கு அவனுக்கும் எனக்குமான உறவு இல்லை. அவனது பெயரோடு சேர்த்து மூர்க்கம் என்ற ஒற்றைச் சொல்தான் என் மனப்பதிவாகயிருந்தது.
புல்லட் அப்போது எண்பது கிலோமீட்டர் வேகத்தைத் தொட்டிருந்தது. சாத்தூரிலிருந்து இருக்கங்குடிக்குச் செல்லும் ஏதோவொரு காட்டுப் பாதையில் வண்டி ஓடிக்கொண்டிருந்தது. நான் கண்களை மூடிக்கொண்டேன். இன்று என் வாழ்வின் கடைசி நாள். கால்கள் அனிச்சையாய் நடுங்கின. வேகத்தில் புல்லட் அதிர்ந்து, பார்வை மங்கி, காதுகள் அடைத்துக்கொண்டன. கண்ணுக்கெட்டிய தூரம்வரை புழு பூச்சிகள் தென்படாத பொட்டல் சாலை. வண்டி ஓட்டிக்கொண்டிருந்த வினோத் அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டர். டைரக்டர் என் நண்பன். அடுத்த நாளுக்குரிய போலீஸ் ஸ்டேஷன் செட் பணியை என்னிடம் ஒப்படைத்துவிட்டு எல்லோரும் அதிகாலையில் ஷூட்டுக்குக் கிளம்பிவிட்டார்கள். “அவன் ஒரு கிறுக்கன். கொஞ்சம் பாத்துக்கோ” எச்சரிக்கையோடுதான் நண்பன் போயிருந்தான். ஏதோவொரு கடுப்பில் என்னைப் பழிவாங்கவே இவனிடம் மாட்டிவிடுகிறான் என்பது எனக்கு அப்போது புரியவில்லை.
“கேக்கல”
எதிர்க்காற்றில் அவன் சொல்லியது அரைகுறையாய்க் கேட்டது. என் இடது காதை அவன் தோளருகே கொண்டு போனேன். வேகத்தைக் குறைக்காமலே கூலாக ரோட்டைவிட்டுக் கண்களை அகற்றி வலப்பக்கம் திரும்பி என்னைப் பார்த்தபடிச் சொன்னான்,
“எங்கயாவது ரோட்ல நாய் மாரி அடிபட்டுச் சாகணும், அவ்ளோதான் என் ஆசை.”
‘யோவ் நீ சாவுய்யா. அதுக்கு ஏன் என்னையும் கூட்டிட்டுப் போற’ மனசுக்குள் பேசிக்கொண்டேன். வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கிவிடலாமா! அவன் எதையும் கவனத்தில் கொண்டது போலில்லை. மிகச்சரியான பெயர் கொண்டவர்களை நான் பார்த்ததில்லை. இத்தனை எக்ஸென்ட்ரிக்கான நபர்களோடு எனக்குப் பழக்கமில்லை. சாத்தூர் வெயிலுக்கு மண்டை பிளந்து மூளை வெளியேறிக் கொண்டிருந்தது. இன்றைய பொழுது இவனோடுதான். கொடுமை!
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then