21
2017ஆம் ஆண்டு திண்டுக்கல் பாடியூர் என்ற ஊரில் ஐந்து ஏக்கர் பரப்பிலான மண் மேட்டிலிருந்து சில பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஏற்கெனவே அங்கு பூமியின் மேற்பரப்பில் சிவப்பு நிறத்திலான மண்பானை ஓடுகளின் சிதறல்கள் இருந்துவந்தன. அதையொட்டி அங்கு தோண்டியபோது மட்பாண்ட ஓடுகள், முதுமக்கள் தாழிகள், எலும்புகள், சுடுமண் சிற்பங்கள் போன்றவை கிடைத்தன. பூமிக்கு மேல் பழங்கால கட்டடம் ஒன்று இருந்தது. அதில் நீண்ட காலமாக இருந்துவரும் முனியப்பனுக்குச் சிறிய அளவில் வழிபாடு நடத்தப்படுகிறது. தொல்லியல் துறையினருக்கு முன்பே அப்பகுதியின் ‘தன்னார்வ’ தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கிருந்த பொருட்களைப் பார்வையிட்டு “அது சங்க காலம்” என்று ஊடகங்களுக்குத் தகவல்கள் அளித்தனர். அது சங்க காலமா, இல்லையா என்பது ஒருபுறமிருக்கட்டும். இவ்வளவு உடனடியாக அறுதியிட்டதற்கு அங்கு கிடைத்த பொருட்களின் காலக்கணிப்பை விடவும், அவ்வூருக்குச் சூட்டப்பட்டிருந்த பெயர்தான் காரணமாக அமைந்திருக்கிறது. சங்க இலக்கியங்களில் தற்காலிகமாக அமைக்கப்படும் போர்க்கள பாசறை ‘பாடி’ என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே, சங்க கால ஆயுதக் களமாகப் பாடியூர் இருந்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். பாடியூர் என்ற பெயரைக் கணக்கில் எடுத்துக்கொண்ட அவர்கள், பாடியூரில் அகழ்வாய்வு செய்யப்பட்ட குறிப்பான அந்த இடத்தின் பெயரைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில், அப்பெயர் பிரதிகளில் இல்லை. இன்றைய தொல்லியல் அகழ்வாய்வுகள் மீது மிகுதியும் செல்வாக்கு செலுத்துவது பிரதிமயப்பட்ட புரிதல்களே. வழக்காறுகளைப் போதுமான அளவில் கணக்கில் எடுப்பதில்லை. வழக்காறுகள் மாறிக்கொண்டே வருவதால் அது தூய்மையான ஆதிகாலத்தைக் காட்ட உதவுவதில்லை என்பதாலேயே இவ்வாறு செய்யப்படுகிறது. வழக்காறுகளை அப்படியே பொருள் கொள்வதைக் காட்டிலும் அவற்றின் ‘உள்மெய்’யை வாசித்துப் பொருள் கொண்டால் அவற்றின் பயனைப் புறந்தள்ள வேண்டிய தேவை எழாது
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then