23
என்னுடைய கிராமத்தின் பெயர் முன்னூர் மங்கலம். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இருக்கிறது. கேட்டதும் இப்படியொரு பெயரா என்று யோசிக்கத் தோன்றும். மங்கலம் தனித்தும், பிறப் பெயர்களோடு சேர்ந்தும் தமிழ்நாட்டில் பல ஊர்களின் பெயர்களாக இருக்கிறது. ஆனால், இதில் முன்னூறு என்ற எண்ணின் பெயர்தான் கவனம் ஏற்படக் காரணமாக இருக்கிறது. மக்கள் வழக்கில் முன்னூத்தி மங்கலம் என்றும் சொல்லப்படுவதுண்டு. இந்த முன்னூறை வைத்து ஊரில் கதையொன்று வழங்கப்படுகிறது. நானும் இக்கதையைச் சிறுவயதிலிருந்து பலமுறை பலரிடமிருந்து கேட்டு வளர்ந்திருக்கிறேன். இந்தக் கதை எங்கள் ஊரில் மட்டுமல்ல, சுற்று வட்டாரமெங்கும் பிரபலம். அக்கதை எங்கள் ஊருக்குத் தனி அடையாளத்தைத் தந்திருக்கிறது. எங்கள் கிராமத்திற்கு வடக்குப் பக்கம் அரை கிலோமீட்டர் தொலைவில் காடு தொடங்குகிறது. காட்டின் தொடர்ச்சியில் ஜவ்வாது மலைத்தொடர்கள் இருக்கின்றன. சங்க இலக்கியங்களில் ஒன்றான மலைபடுகடாம் நூலில் சொல்லப்படும் நவிர மலை இதுவே என்று கருதப்படுகிறது. முன்னூர் மங்கலத்தைப் பற்றி வழங்கப்படும் கதையில் இந்தக் காடு, மலை யாவும் உள்ளடக்கப்படுகிறது. பொதுவாக மகாபாரத, இராமாயண கதைகளோடு தொடர்புபடுத்திப் பல ஊர்களின் கதைகள் வழங்கப்படுகின்றன. அவற்றைப் பற்றித் தமிழில் எழுதப்பட்டும் இருக்கின்றன. இவ்வாறு தொடர்புப்படுத்துவதற்குப் பெரும்பாலும் அந்தந்த ஊர்களுக்கு வழங்கப்படும் பெயர்களிலிருந்தே சான்று காட்டப்படும். அதாவது, பெயரிலிருந்து ஒரு கதை விரியும். அதைப் போலவே இங்கும் முன்னூறு என்கிற பெயரை வைத்து ஒரு கதை வழங்கப்படுகிறது. அது மகாபாரதத்தோடு தொடர்புகொண்டதாக அமைந்திருக்கிறது:
ஊரில் முன்னூறு பார்ப்பனக் குடும்பங்கள் வாழ்ந்துவந்ததால் முன்னூர் மங்கலம் என்ற பெயர் வந்ததாம். ஊருக்குப் பின்னாலிருக்கும் மலையில் ஒரு பகாசுரமுனி (பகா – அசுரமுனி) வாழ்ந்துவந்ததாம். அந்த முனிக்கு முன்னூறு பார்ப்பனர்களும் பயந்து கிடந்தனர். தனக்குப் பசிக்கும்போதெல்லாம் ஊருக்குள் வந்து அகப்படும் ஆடு மாடுகளையும் மனிதர்களையும் தின்றுவிட்டுப் போவதை முனி வழக்கமாக வைத்திருந்தது. இதனால் மக்கள் துன்பப்பட்டனர். ஒருகட்டத்தில் மக்கள் முனியை எதிர்க்க முடியாமல் ஒரு முடிவுக்கு வருகின்றனர். முனி ஊருக்குள் எப்போது வரும், யாரைத் தின்னும் என்று அஞ்சிக் கிடந்த பார்ப்பனர்கள், “ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலிருந்து ஓர் ஆள் வண்டியில் உணவைக் கொண்டு செல்வர். அதன்படி முனி வண்டி, மாடு, மனிதர் ஆகியவற்றைச் சாப்பிட்டுக்கொள்ளலாம்” என்ற ஒப்பந்தத்திற்கு வந்தனர். இதனால் கண்டபடி அழிவு நேரிடுவதைத் தடுக்க முடியும் என்று நினைத்தனர்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then