இன்று அதிகாலையில், முஹமெட் அஸ்லம் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, அவனது பெயர் நாகநாதன் முருகவேள் துலீப் என்றுதான் இருந்தது. ஒரு மணிநேரத்துக்கு முன்புதான் அவன் பெயரை மாற்றியிருந்தான். பள்ளிவாசலிலிருந்து அவன் வெளியே வந்தபோது, பள்ளிவாசலுக்கு எதிரே நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருக்கும் காவல்துறையினரின் இரண்டு வாகனங்களுக்குள்ளும் பொலிஸ்காரர்கள் கைகளில் நவீனரகத் துப்பாக்கிகளுடன் அமர்ந்திருந்தார்கள்.
அந்த சிறிய பள்ளிவாசல், பாரிஸின் புறநகரான ‘லு ரன்ஸி’யில் சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்தது. பள்ளிவாசலைச் சுற்றி அரைக் கிலோ மீட்டருக்கு வெறும் புற்தரைதான். பள்ளிவாசலை குடியிருப்போடு இணைக்கும் சிறு தெருவில் அஸ்லம் நடந்துகொண்டிருந்தபோது, நீண்ட அங்கிகளும் தலையில் தொழுகைத் தொப்பிகளும் அணிந்து எதிரே வந்த இரண்டு முதியவர்களுக்கு “அஸ்ஸலாமு அலைக்கும்” எனக் கண்கள் பளிச்சிட சலாம் சொன்னான். புற்தரையைக் கடந்ததும் சிறிய கடைத் தொகுதியும், அதற்கப்பால் ‘சித்தே’ எனச் சொல்லப்படும் நெருக்கமான அடுக்குமாடிக் குடியிருப்புகளுமிருந்தன. அங்கேதான் அஸ்லமின் வீடிருந்தது. இப்போது அஸ்லமின் கால்களில் வேகம் அதிகமாயிற்று.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then