இரு காதலர்கள்-
ஒரு கம்யூனிஸ்டும் ஒரு பதிப்பாசிரியரும்
கலவியிலிருந்தனர்.
அந்தக் கம்யூனிஸ்ட்
‘இன்குலாப்’ என்ற பெயரை முனகினாள்.
பதிப்பாசிரியரோ அவள் முனகலில்
ஒரு தொழில்நுட்பப் பிழையைச் சுட்டிக்காட்டினார்-
‘குலாப்’ என்ற சொல்லை உச்சரிக்கும் காற்றழுத்தம்
அவளிடத்தில் போதவில்லையாம்.
காணாமல் போன அவளது முலைகளுக்காகவும்
அவர் குறைபட்டுக்கொண்டார்.
அதீத உணர்ச்சிவசப்பட்ட தோழர் ஒருவர்
கதிர் அரிவாளால் அவற்றை அறுத்துவிட்டதாக,
அந்தக் கம்யூனிஸ்ட் வலியோடு பதிலளித்தாள்.
வீட்டிலிருந்துதான் புரட்சி துவங்குகிறதாம்.
அடுத்து அவரது விரல்களைச் சுட்டிக்காட்டினாள்
சிரித்தபடியே அவர் கூறினார்,
“அதிகம் விற்கும் கார்ப்பரேட் நூல்களின்
உயிரற்ற வார்த்தைகளுக்குத் தீ மூட்டுகையில்
என் கைகளைச் சுட்டுக்கொண்டேன்.”
அசைந்தாடும் கொடிக்கம்பத்தின் செவ்வானத்தில்,
அன்று சில நட்சத்திரங்கள் பிறந்தன.
] goodbadeditor@gmail.com




