குகையிருள் ஒளியில் நர்த்தனமாடும்
தேவதையைக் கண்டேன்.
கடலலைகளில் குதித்துச் சென்ற
மீன்களாய்
கனாக்களின் உருவமாய்
நினைவின் ஓவியமாய்
கணங்களில் மறைந்தவளை
வெகுதூரம் தேடித் திரிந்தலைந்தேன்.
துடித்த கண்ணிகளினூடே
கணக்கறியா நிமிடப் பெருவெளியில்
கால் படிந்த சுவடுகள்
காற்றில் திரிந்தூலாவுகிறது.
மணல் காற்றாய்
மௌன சப்தங்களோடு
நிலவில் ஏறி குதித்து விளையாடும்
மனமாய்,
புகைத்தெரியும் தீக்குச்சியின்
தீபமாய்,
நிழலைத் தொட்டுத் தடவி
நீண்ட முத்தம் கொடுக்கிறேன்.
மாயத்திரை பூட்டி
காட்டுப்பூவாகி
கடும் தவமிருந்து தேடி அழைக்கிறேன்.