உலகிலேயே மிகவும் மோசமான நாடுகளின் வரிசையில் முதன்மையான இடத்திற்குத் தகுதியான இந்தியாவை, உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் மிகச் சிறந்த நாடு என்று சொல்லி ஆட்சியாளர்கள் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இங்குதான் மதவெறியோடு கொடூரமான சாதி வெறியும் தலைவிரித்தாடுகிறது. அதன் காரணமாகவே, இங்கு சமூக – அரசியல் – பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டோர்களாக இருக்கும் தலித் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களும் தீண்டாமை வன்செயல்களும் இன்றைக்கும் தொடர்கின்றன. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் உள்ள எந்த நீதிமன்றத்திற்கும் தலித் மக்களின் நலனில் அக்கறை இல்லை. இதுவும் கூட ஒருவகையில் சமூக விரோதிகளான சாதியவாதிகளுக்குத் தலித் மக்கள் மீது எந்தவோர் அச்சமும் இன்றி வன்முறைகளை நிகழ்த்துவதற்கு வழிகோலுகிறது. இதனால்தானோ என்னவோ “பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளராய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும்” என்று அன்றே சொன்னார் பெரியார். அண்மையில்கூட, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 37 கோடிக்கும் மேலான பணத்தைத் தீயணைப்பு வீரர்கள் கைப்பற்றியிருக்கிறார்கள் என்றால், நீதி நிதிக்கு விலைபோய்விட்டது என்றுதானே அர்த்தம். இத்தகைய சூழலில் தலித் மக்களுக்கான நீதி என்பது சாதிய தேசத்தில் கானல் நீர் போன்றதே.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then