டொக் டொக்
‘யாரது’
வெளியே போராட்டம் நடக்கிறது
‘மன்னிக்கவும்
நான் நாவல் எழுதுவதில் பிசியாக இருக்கிறேன்’
டொக் டொக்
‘யாரது’
வெளியே மறியல் நடக்கிறது
‘மன்னிக்கவும்
நான் குறுநாவல் எழுதுவதில் பிசியாக இருக்கிறேன்’
டொக் டொக்
‘யாரது’
வெளியே கலவரம் நடக்கிறது
‘மன்னிக்கவும்
நான் சிறுகதை எழுதுவதில் பிசியாக இருக்கிறேன்’
டொக் டொக்
‘யாரது’
வெளியே அரசின் கைக்கூலிகள்
மக்களை வதைத்துக்கொண்டிருக்கிறார்கள்
‘மன்னிக்கவும்
நான் குறுங்கதை எழுதுவதில் பிசியாக இருக்கிறேன்’
டொக் டொக்
‘யாரது’
வெளியே எல்லாம் நடக்கிறது
‘மன்னிக்கவும்
நான் தத்துவார்த்த கவிதை எழுதுவதில் பிசியாக இருக்கிறேன்’
டொக் டொக்
‘யாரது’
“ம்…. ங்கோயா புருஷன்”