புதுக்கவிதையின் சிறப்பே அதன் ஜனநாயகத்தன்மைதான். எழுதத் தெரிந்த அனைவரும் தம் குரலைத் தமக்குத் தெரிந்த மொழியால் ஒலிக்கச் செய்யலாம். தொண்ணூறுகளில் புதிய அலையாகத் தமிழகத்தில் பரவிய தலித் இலக்கியம், கவிதையைத்தான் முதலில் தன் வடிவமாகத் தேர்ந்துகொண்டது. ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’, ‘பிணத்தை எரித்தே வெளிச்சம்’ போன்ற மொழிபெயர்ப்புக் கவிதைகளினூடாக இதனைச் சாத்தியப்படுத்தியவர் இந்திரன். இக்கவிதைகளில் வெளிப்பட்ட சப்தம், தமிழ்ச் சூழலுக்குப் புதிதாக இருந்தது. தம் துயரத்தை வெளிப்படுத்த ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கவிதை வடிவமே பொருத்தமாக இருந்ததை இவ்விரு கவிதைத்தொகுப்புகளும் நிரூபித்தன. ஆதிக்கச் சாதியினருக்குப் பறையடித்தல் தொழிலைச் செய்துவரும் பட்டியலினத்தவருக்கெதிரான ஒடுக்குதலும் துணி வெளுக்கும் வண்ணார் சாதியினருக்கெதிரான ஒடுக்குதலும் முடிவெட்டும் நாவிதர் சாதியினருக்கெதிரான ஒடுக்குதலும் அடிப்படையில் வெவ்வேறு தன்மைகள் கொண்டவை.
பட்டியலினத்தவர், வண்ணாரையும் நாவிதரையும்விட எண்ணிக்கையில் அதிகம் என்பதால் அவர்களுக்கெதிரான ஒடுக்குதலே இலக்கியங்களிலும் பொதுவெளியிலும் அதிகம் பதிவாகியிருக்கின்றன. மற்ற இரு சமூகத்தினரும் ஊருக்கு ஒரு குடிகள் என்பதால், இவர்களுடைய பிரச்சினைகள் அவ்வளவாக இலக்கியமாகவில்லை. 1951 இல் தமிழகத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நாவிதர் சமூகத்தின் (அம்பட்டன், மருத்துவன் உட்பட) எண்ணிக்கை 1,44,695; வண்ணார் சமூகத்தின் (புதிரை வண்ணார் உட்பட) எண்ணிக்கை 2,54,073. கடந்த எழுபதாண்டுகளில் இம்மக்களின் தொகை கணிசமாக உயர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then