5
மெட்ராஸ் கலை இயக்கம் எனும் உச்சரிப்புடன் இயல்பாக இணைத்து வரும் பெயர் கோலோழி சீரம்பத்தூர் சங்கர பணிக்கர். ஓவியர், கல்வியாளர் என்ற பன்முக அடையாளங்களைத் தாண்டி விடுதலைக்குப் பின்னான இந்திய கலை இயக்கத்துக்கு கே.சி.எஸ்.பணிக்கரின் மிக முக்கிய பங்களிப்பு, மெட்ராஸ் கலை இயக்கம் என்று சொன்னால் அது மிகையாகாது. 1911ஆம் ஆண்டு கோயமுத்தூரில் பிறந்த பணிக்கர் கேரளம் மற்றும் தமிழகத்தில் தனது ஆரம்பகால கல்வியைப் பயின்றார். பின்னர் சென்னை கவின் கலை கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.
கலைப் படிப்பில் கற்ற வடிவங்களிலிருந்தே பணிக்கரின் கலைப் பயணம் தொடங்கியது. பின்பு படிப்படியாக, அவர் காலத்தின் பெரும்பாலான பின்காலனிய ஓவியர்களைப் போல், இந்திய மரபியல் வடிவங்கள் மீது தனது கவனத்தைத் திருப்பினார். குறிப்பாக, இந்திய பாரம்பரிய கலைகளில் வெளிப்பட்ட மீவியற்பியல் (metaphysical) கூறுகள் சார்ந்த ஓவியங்களை வரையத் தொடங்கினார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then