தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திர’த்திலேயே சாதி பற்றிய உரையாடல் இருக்கிறது. வாழ்வியல் /பெருமை / சிக்கல் / எதிர்ப்பு என்று சாதிகுறித்த எதிரும் புதிருமான பலவும் புனைவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கு எதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது என்ற முறையில், எதார்த்த இலக்கியம் என்பதே சாதிய வாழ்வியலைப் பேசுகிற இலக்கியமாக இருப்பதைப் பார்க்கிறோம். பிராமணர்களும் வௌ;ளாளர்களும் தமிழ்க் கதையுலகத்தை ஆக்கிரமித்திருந்த சூழலில் புதிதாக எழுதவந்த இடைநிலைச் சாதிகளின் எழுத்தை ‘வட்டார இலக்கியம்’ என்று தமிழுலகம் வகைபிரித்துக் கொண்டது. ஒருவகையில் வட்டார இலக்கியம் என்பது அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் பெரும்பான்மைச் சாதிகள் அல்லது அதிகாரச் சாதிகளின் கதையாடல்களாக மாறிவிட்டது என்று சொல்ல முடியும். இந்நிலையில்தான் கொங்குவட்டாரப் பின்புலத்தில் கதைகளை எழுதி வரும் பெருமாள்முருகனின், ‘பூக்குழி’நாவலைப் பார்க்கிறோம்.
இந்நாவல் சாதியை அப்படியே பிரதிபலிக்காமல் அதன் முரண்குறித்த உரையாடலை முன்வைக்கிறது. பெருமாள்முருகன் இந்நாவலை சாதி மீறித் திருமணம் செய்து ‘பலி’யான தருமபுரி இளவரசனுக்குச் சமர்ப்பித்துள்ளார் . ‘பூக்குழி’யைப் படிக்கும் யாருக்கும், தலித் – தலித்தல்லாதோர் என்கிற பின்புலத்தில் கதை எழுதப்பட்டிருக்கலாம் என்று எண்ணவே வாய்ப்பிருக்கிறது. ஆனால், கதை சாதியின் முரண்களைப் புரிந்துகொள்வதற்கான முயற்சி பற்றியதாக உள்ளது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then