எருமை மறம்

மௌனன் யாத்ரிகா

க்கள் பறந்துவிட்ட
தேன் தளும்பும் அடையைப்போல்
இளமஞ்சள் வளர்பிறை
வானில் ஒளிர்ந்துகொண்டிருந்தது;
பின்பனியின் துவர்ப்பாலும் குளிராலும்
முறுக்கேறிக் கிடந்தது யாமம்;
ஈரமான காற்று ஊரை வளைத்தது;
கூகையின் குரலுக்கு
நாய்களின் காதுகள் நிமிர்ந்தன;
கூகை வாய் மூடும் கணத்தில்
குயில் வாய் திறந்து கூவிற்று;
சாயலுக்கு
அந்தப் பாடலும்
அலறலைப் போலவே இருந்தது;
கரியனின் இடது புயத்தில்
தலை வைத்துப் படுத்திருந்தவளின் பார்வல்*
எறவானத்தில் நிலைக்குத்தியிருந்தது;
தொங்கும் கூட்டுப் புழுவைப்போல்
விளக்கின் மெல்லிய சுடர்
ஆடிக்கொண்டிருந்தது;
பேச்சற்ற பொழுதின் மௌனம்
நெஞ்சுக்கூட்டை உடைத்துவிடும் என்பது
இருவருக்கும் தெரியும்;
கரியனின் உறைந்த மனநிலை
தலைவியைத் திகில் கொள்ளச் செய்தது;
அவன் திட்டமிடுகிறான்;
மூடிய இமைகளின் மேல்
எதிரிகளுக்கென்று தயார் செய்த
கொலைக் கருவிகளை அடுக்குகிறான்;
பிணைத்துக் கட்ட வேண்டிய மூங்கில்களைக்
காட்டுக்குள் தேடி வைக்கிறான்;
பதுங்கித் தாக்கக் கூடிய
உயரமான மரங்களைத்
தேர்ந்துகொள்கிறான்;
அடர்ந்த புதர்களை வகைப்படுத்துகிறான்;
எங்கெல்லாம் கண்ணி வைப்பது
எந்தெந்தப் பாதைகள் சாதகமானவையென்று
கணக்கெடுக்கிறான்;
கரியன் தன் மனதில்
ஓட்டிப் பார்க்கும் போர்க்களக் காட்சி
குருதிக் களரியாக இருக்கிறது;
அவனுடைய விலாப்பக்கமாக
ஒருக்களித்துப் படுத்தவள்
கரியனின் இதயத் துடிப்பில்
பறைச் சத்தமும் சேர்ந்து ஒலிப்பதை உணர்கிறாள்;
ஆழ்ந்த ஒரு பெருமூச்சு விடுகிறாள்;
தன்னியல்பில் அவள் தலை
இரண்டுமுறை அசைகிறது;
தாய்வழிப் போர்க்குணம்
மனதைச் சமன்படுத்துகிறது;
மெல்ல
அவளிடமிருந்து வெளிப்பட்ட
சீரான நாசிக்காற்று
கரியனின் மார்பு முடிகளைக்
கோதிக் கொடுக்கிறது;

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger