அண்டம் பொருட்களாலானது என்று மனிதர்கள் நம்புகிறோம். ஆனால், இந்த உலகம் நிகழ்வுகளால் நெய்யப்பட்டுள்ளது. பொருட்களுக்கும் நிகழ்வுகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், பொருட்கள் காலத்தில் நிலைத்திருக்கின்றன. நிகழ்வுகள் வரையறுக்கப்பட்ட கால அளவு கொண்டவை. ஒரு கல் மூல-மாதிரி பொருள், நாளை அந்தக் கல் எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு நம்மால் விடையளிக்க முடியும். மாறாக, முத்தம் என்பது ஒரு நிகழ்வு. முத்தம் நாளை எங்கே என்று கேட்பதில் அர்த்தமில்லை. உலகம் முத்தங்களின் வலையமைப்புகளால் ஆனது, கற்களால் அல்ல
– கார்லோ ரவொலி.
21ஆம் நூற்றாண்டுக் கலைப் பிரதிகள், பல்குரல் கதைக்கரு அல்லது கதை சொல்லல் முறையின் நெகிழ்வுத்தன்மைகள் வழியே தங்கள் அழகியலைக் கண்டடைகின்றன. உறுதியான உண்மைகளுக்குள் அடைபடாத, உண்மைகளைக் கடந்த இருப்பையே இன்றைய கலை வடிவங்கள் உரையாட விரும்புகின்றன – அத்தகைய உரையாடல்களே பிரதியின் அழகியலாகவும் உருக்கொள்கின்றன.
உண்மை எனப்படும் பண்பாட்டு – அரசியல் நிலை, மாற்றங்களின் வேகத்தில் அதே பண்பாட்டு – அரசியல் காரணிகளால் மாறுதல்களுக்கு உள்ளாகி புதிய உண்மைகளாகப் பரிணமிக்கிறது. உருக் கொள்ளும் இந்தப் புதிய உண்மைகள் பல நிலைகளில் ‘தரவுகள்’, ‘மதிப்புகள்’ எனும் முனைகளில் முரண் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, இந்திய அரசியல் உண்மையின்படி சாதிய வன்முறைகள் பெருங் குற்றமாகக் கருதப்படுகின்றன. ஆனால், சமூக மதிப்புகளின்படி சாதிய வன்முறைகள் ‘வாழ்க்கை முறை’ என்று அளவிடப்படுகின்றன. இந்த முரணில் எந்த உண்மையைப் பேசுவது எனுமிடத்தில் சமகால ஆக்கங்கள் இன்றைய அபத்தமான எதார்த்தங்களைத் தாண்டிச் சமூகநீதி நிறைந்த கூட்டு வாழ்வுக்கான புதிய உலகைத் தேடி பயணிக்கின்றன.
உறுதியான உண்மைகள் மீது பற்றுகொண்ட கடந்த தசாப்தங்களின் கலை ஆக்கங்கள், பிரதியில் இயங்க வேண்டிய உரையாடல்களை வலுக்கட்டாயமாக நீக்கி அல்லது உரையாடலுக்கான இடத்தை உறுதி செய்யாமல், சொற்பொழிவுகளாக நிறைவுகொண்டன.
மெய்யியலும் அறிவியலும் உறுதியான உண்மைகள் எனும் நிலையைக் கேள்விக்குட்படுத்தி, உண்மைகளின் உறுதியைச் சிதைத்து, உரையாடலுக்கான வெளியை மனிதச் சமூகத்தின் மற்ற அமைப்புகளுக்கும் பரவச் செய்தன. எடுத்துக்காட்டாக, ஈரப்பு விசையால் அண்டம் இயக்கப்படுகிறது எனும் உறுதியான நியூட்டனிய உண்மையை உடைத்த ஐன்ஸ்டீன், பொருட்களாலான உலகைக் கடந்து திரவ நிலையில் நிகழ்வுகளால் கோக்கப்பட்டிருக்கும் உலகை முன்வைத்ததோடு நிற்காமல், கருந்துலைகளையும் குவாண்டம் துகள்களையும் நோக்கிய உண்மைகளின் பயணத்தின் இலகு நிலையை நிறுவினார். இதே கருத்தாக்கம் 20ஆம் நூற்றாண்டு மெய்யியல் தளத்திலும் நிகழ்ந்தது. குறிப்பாக, விளிம்புநிலை அரசியலைத் தொடர்ந்து பேசும் பின்காலனிய மெய்யியல் மற்றும் பின்காலனிய இலக்கியங்கள் பல்குரல் தளங்களை உறுதி செய்ததன் மூலம் உறுதியான உண்மைகளைக் கேள்விக்குட்படுத்தி, உண்மைகளைக் கடந்த மனித இருப்பைப் பேச விழைந்தன.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then