1
கதவைத் திறந்தவுடன் காலின் கீழ் தட்டுப்பட்ட அந்தக் கடித உறையை எடுத்தான். பெயர் முகவரி எதுவுமற்ற அதனைத் திறந்து படித்துவிடக்கூடாது என்று வழக்கம் போல நினைத்துக்கொண்டு மேசை மீது வைத்தான். மீண்டும் அதனை எடுத்துச் சன்னல் வெளிச்சம் படும்படி கையில் பிடித்து ஊடுருவிப் பார்த்தான். பிரித்து விட மனம் உந்தியது. ஆனால், இப்பொழுது பிரித்துப் படிக்க வேண்டாம் என மனதைத் திடப்படுத்திக்கொண்டான்.
திடப்படுத்திக்கொள்ளுதல் என்பதெல்லாம் வெறும் சொல் தந்திரம்தான். பிரிக்க வேண்டாம் என முடிவு செய்துகொண்டான். முடிவு கூட இல்லை, முடிவு செய்ய முடியாத நிலையில் இருந்தான். அதையும் விட கடித உறையைக் கையில் வைத்துக்கொண்டிருந்தான் என்பதுதான் எளிமையான காட்சி. பிறகு அதைத் தன் கைப்பையில் வைத்துக்கொண்டான்.
எதையோ மறந்து வைத்துவிட்டுச் சென்றதாக நினைத்து அறைக்குத் திரும்பி வந்தவனுக்கு அப்படி எதையும் மறந்து வைத்துவிட்டுச் செல்லவில்லை என்பது அப்போது நினைவுக்கு வந்தது. அதற்கிடையில் இந்தக் கடித உறை. வெளியே செல்வதென்பது பழக்கத்தின் காரணமாக நடந்தது. அதற்குப் பிறகு திரும்பி வந்தது என்பது அன்று எங்கெங்கே செல்வது என்ற குழப்பத்தால் நடந்தது. தான் செய்யும் செயல் மீதான மனத்தடை எதையோ மறந்து அறையில் வைத்து விட்டதான ஒரு சந்தேகமாக மாறியிருந்தது. அந்தச் சந்தேகமும் அவனாகவே ஏற்படுத்திக்கொண்டதுதானோ என்ற சந்தேகமும்கூட அவனுக்கு அப்போது ஏற்பட்டது. அறைக்குள் வந்த பிறகுதான் தோன்றியது அது உண்மையில் தன்னுடைய அறைதானா? இல்லை, வேறு யாருடைய அறையா? நண்பர்கள் யாருடைய அறையுமாக இருக்கலாம்தான். ஆனால், அறைக்குள் இருந்த அனைத்தும் பழகியதாக இருந்தன.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then