சென்னைப் பட்டணத்திலிருந்து ஆசான் அயோத்திதாசப் பண்டிதர் அன்று மாலை புதுச்சேரியில் நடக்கவிருந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்துகொண்டிருந்தார். அடையாறு கால்வாய் வழியாக மரக்காணம் வரை படகிலும் பிறகு குதிரை வண்டியிலும் அவர் வருவதற்கான ஏற்பாடுகளை எங்கள் அன்னை அத்தினா லூயி பொன்னம்மா ஏற்பாடு செய்திருந்தார். அவர் பெரிய காலாப்பட்டு வந்து சேர்ந்தபின் தானே நேரில் அவரை வரவேற்று புதுச்சேரி நகரத்திற்கு அழைத்து வர வேண்டும் என்பதால் அவர் அன்று காலையே பெரிய காலாப்பட்டுத் தோட்டத்திலிருந்த சின்ன மண்டபத்திற்குப் புறப்பட்டபோது நானும் அவருடன் செல்லவிருப்பதாகவே நினைத்திருந்தேன்.
“நீ இங்கே இருந்து மாலைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் லிபரித்தா. கவனம், நூறு பெண்களுக்கு மேல் வரவுள்ளார்கள். மதியச் சாப்பாடு, மாலைச் சிற்றுணவு, இரவு உணவு எல்லாம் பதமாக குறைவில்லாமல் அமைய வேண்டும். நமது மகான் புதுவை வந்து பேசவுள்ள முதல் கூட்டம் இது. இதுவரை தமிழன் இதழை மட்டுமே படித்தும், அவரது கடிதங்களை வாசித்தும் விடுதலைக்கான படையைக் கட்டிக்கொண்டிருந்த நமக்கு அவரே நேரில் வந்து ஆலோசனைத் தரப் போகிறார். நீ அதில் கவனமாக இருக்க வேண்டும். அப்புறம் நமது பங்களாவிலிருக்கும் புத்ததேவர் சிலையை மேடையின் நடுவில் வைக்க மறந்துவிடாதே.”
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then