அறிஞர் ராஜ் கௌதமனின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் நாள் எகானாமிக் டைம்ஸ் நாளிதழில் வெளியான கட்டுரை இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
தலித் இனப் போராட்ட வரலாற்றில் 1993ஆம் ஆண்டு மிகவும் முக்கியமானது. இவ்வருடத்தில் இரண்டு நிகழ்வுகள் கவனத்திற்குரியவை: முதலாவது, புதுச்சேரியில் வெளியான ராஜ் கௌதமனின் ‘தலித் பண்பாடு’ என்ற நூல். இந்தச் சிறிய தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் தலித் பண்பாடு என்ற கருத்தை வெவ்வேறு கோணங்களில் அணுகி அத்தகைய பண்பாட்டுப் புரிதலுக்கான சாத்தியத்தை விளக்குகின்றன. இந்நூல் ஓர் அறைகூவலாகவும், ஓர் அறிக்கையாகவும், இதுநாள்வரை வழங்கிவரும் தமிழிலக்கிய வரலாறும் அழகியலும் பற்றிய விமர்சனமாகவும், எல்லாவற்றையும் மீறி சில நுட்பமான நோக்கங்களுடனும் குறிக்கோள்களுடனும் இயற்றப்பட்ட சீரிய ஆவணமாகவும் விளங்குகிறது.
இரண்டாவது முக்கிய நிகழ்வு: இலண்டனிலுள்ள ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா என்ற அமைப்பு தமிழ்த் திரை இசையமைப்பாளர் இளையராஜாவின் பெயர் சூட்டப்படாத சிம்ஃபொனியை அரங்கேற்றி, அவருக்கு ‘மேஸ்ட்ரோ’ பட்டம் சூட்டி கௌரவித்த நிகழ்வு வளர்ந்துவந்த தலித் அறிவியக்கத்தில் ஏற்படுத்திய தாக்கம்.
ராஜ் கௌதமனின் நூல், தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க குடியியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள வழிகள் என்ற நோக்கில் நடந்த ஒருநாள் கருத்தரங்கில் பெரிதும் ஆர்ப்பரிப்பின்றி வெளியிடப்பட்டது. சில தரப்புகளிடையே கவனத்தைப் பெற்றிருந்தாலும் (ஒரு பிரபல கலை இலக்கிய இதழ் இந்நூலுக்கு நல்ல மதிப்புரையை வழங்கியிருந்தது), இந்நூல் தமிழ் இலக்கிய வட்டத்தில் பொதுவாக எதிர்ப்பையே ஈட்டியுள்ளது.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





