அயோத்திதாசரின் பௌத்தவயமாதலைப் பண்பாட்டு ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதில் ‘பண்பாட்டுச் சீரழிவு’ என்ற கருதுகோள் உள்ளுறைந்து நிற்பதாக அவர்கள் கருதுகின்றனர். நாட்டுப்புறவியல் ஆய்வாளர்களிடம் இத்தகைய ‘சீரழிவுக் கருதுகோள்’ பற்றிய கண்டனங்கள் அதிகம். பண்பாடு சீரழிந்துகொண்டிருக்கிறது என்று பேசத் தொடங்கும் யாரையும் அவர்கள் சந்தேகத்தோடே பார்க்கிறார்கள்.
அயோத்திதாசர் பண்பாடு சீரழிந்திருக்கிறது என்றே எழுதுகிறார். அவரது ‘இந்திர தேச சரித்திரம்’, இந்தத் தேசமெங்கும் பரவியிருந்த பௌத்த தன்மம் வேஷ பிராமணர்களால் எவ்வாறு சீரழிக்கப்பட்டது என்பதையே விலாவரியாகப் பேசுகிறது. ஆதியிலே அமைதி இருந்தது. அந்த அமைதியைத் தொடர்ச்சியான கட்டுக்கதைகள் மூலம் வேஷ பிராமணர் உடைத்தெறிந்தனர் என்பதே அவரது பௌத்தவயமாதலின் ஆரம்பம். அவர் சீர்திருத்த வேண்டும் என்று நினைப்பதும் கூட இத்தகையப் பண்பாட்டுப் பேரழிவைத்தான் எனும்போது சீரழிவுக் கருதுகோளை எதிர்க்கிறவர்கள் பௌத்தவயமாதலையும் எதிர்க்கிறார்கள்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then