உலகின் மிகப்பெரிய மக்களாட்சியாக மட்டுமல்லாது சமூக ஊடகங்களால் தூண்டப்படும் தீவிரவாதத்தின் மிகப்பெரிய சோதனைச்சாலையாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது. நாடு தழுவிய டிஜிட்டல் கல்வியறிவு, இணைய சேவைகள், பயோமெட்ரிக் முறையில் அடையாளம் கண்டறியும் திட்டங்கள் ஆகிய தொலைநோக்குத் திட்டங்களைக் குறித்துப் பெருமைப்பட்டுக்கொள்கிற வேளையிலும் மிக அரிதான தருணங்களில், இந்திய அரசு, சில அரசு அலுவலகத் தொடர்புகளை இன்றும் கூட ரேடியோகிராம் கருவி மூலமே மேற்கொள்கிறது. ரேடியோ டிரான்ஸ்மிட்டரின் முன் அமர்ந்து ஒருவர் செய்திகளை அனுப்ப, நாட்டின் மற்றொரு பகுதியில் உள்ள வேறொரு டிரான்ஸ்மிட்டர் அந்தச் சட்ட ஆவணத்தை துரிதமாகப் பிரதியெடுக்கிறது. அந்தவகையில் 2015-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி, இந்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து உத்திரப்பிரதேசத்தின் முஸாபர்நகர் மாவட்டத்திலுள்ள சிறையின் கண்காணிப்பாளருக்கு ’அவசரம்’ என்ற குறிப்புடன் ரேடியோகிராம் செய்தியொன்று வந்தது.
தனது இருபத்தியிரண்டாவது பிறந்தநாளைச் சமீபத்தில் சிறைக்கம்பிகளுக்குள் கொண்டாடிய கைதியும், உள்ளுரர் நகை வியாபாரியின் மகனுமாகிய விவேக் ப்ரேமியைப் பற்றியது அச்செய்தி. 2015-ம் ஆண்டின் கோடைகாலத்தில் ஷாம்லி என்ற சிறு நகரத்தில் முகம்மது ரியாஸ் என்ற 42 வயது இஸ்லாமியக் கூலித்தொழிலாளி ஒரு கன்றுக்குட்டியை இழுத்துக்கொண்டுச் சென்றதை உள்ளுரர் கசாப்புக்கடையொன்றிற்குக் கொண்டுசெல்வதாகச் சித்தரித்து வழிமறித்தான் ப்ரேமி. பசுக்கொலையென்பது பெரும்பாலான இந்துக்களுக்கு தெய்வக்குற்றமாகவும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாகவும் இருந்ததால் ரியாஸின் இச்செயல் கடுமையான குற்றமாகக் கருதப்பட்டது. ப்ரேமி, பசுக்கொலைக்கெதிரான போரை முன்னெடுக்கும் தீவிர இந்துத்வ இளைஞர் படையான பஜ்ரங் தள் அமைப்பின் உள்ளுரர் தலைவனாக இருந்ததால் நிலைமை இன்னும் மோசமானது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then