மொழி இயற்கையானது. வார்த்தைகள் அதனுடைய பொருளைக் கண்டடைய வெகு தொலைவைக் கடந்தாக வேண்டும். புராதனக் காலங்களில் வார்த்தை மண்ணுக்குள் புதைந்து கிடப்பதைப் போல ஒருவனின் மூளையில் அவிந்து கிடந்திருக்கலாம். பின்னர் சகிக்கவியலாத கணத்தில் ஒரு விஷயத்திற்காக அலறும்போது உள்நாக்கு மடங்கி, தொண்டையை வருடி ஆர்ப்பரித்து ஒலித்திருக்கும். அப்போது அதற்கோர் அர்த்தம் உருவாகியிருக்கும். அதன் மூலமாகவே மனிதன் வார்த்தையைக் கண்டடைந்தான்.
சிறியதொரு வழிகூடப் பயணத்திற்கான தொடக்கம் ஆகலாம். சாய்ந்து கிடக்கும் ஒரு மரக்கிளை மீதேறி நின்று உலகைக் காண இயலும். அதனுடைய இலையைப் பறித்து எறிந்தால் அது வான் பயணமாகி விடும். பயணத்தின் எந்தப் பாதையில் நிற்கிறேனென எனக்குத் தெரியாது. இருப்பினும் கண்டதில் பாதியைக் காட்சியாகவும் கேட்டதில் பாதியை வார்த்தையாகவும் கூறுவதற்குப் பெரிய கதை உள்ளது. நினைவில் தங்கி நிற்க வேண்டும் என்றால் மிகப் பரந்த மனம் தேவை. எதையும் உள்ளுக்குள் நிறைக்கவும் அதை வாரி யிறைத்து அறுவடை செய்யவும் விசாலமான வயல்வெளி அவசியம். அப்போது ஒரு சொல் கூடக் கதையாகிவிடும். கண்ணுற்ற காலத்தையும் கேள்விப்பட்ட வார்த்தைகளையும் இன்னும் எத்தனையோ நபர்களிடம் கூற வேண்டியுள்ளது என்று பொம்மஹள்ளியைச் சேர்ந்த பாதிரியார் கூறினார். ‘நீ எழுது, அது அடுத்தவனின் வார்த்தை.’ அதைக் கேட்ட பிறகே இத்தனையும் எழுதுகிறேன்.
வழியோரத்தில் வரிசை வரிசையாக நிற்கும் விதவித கார்கள். ஹோண்டா, மாருதி, ஹ¨ண்டாய், ஃபோர்ட், ப்யூஷே போன்ற கார்களின் அருகில் போகும்போது ‘சந்திர அண்ணா என்னை எடுத்திட்டுப் போக மாட்டீர்களா?’ என்று கேட்கும் மாருதி கார்களில் இருந்துதான் அந்த வார்த்தை எனக்குக் கேட்டது. எஞ்சிய வாழ்நாளில் எவ்வழியாகச் சஞ்சரிப்பேன் என்றும் யார் என்னிடம் பேசுவார்கள் என்றும் எனக்குத் தெரியாது. இருப்பினும் அந்த வார்த்தை என்னைச் சுற்றி, என் காதுகளின் அருகில் ஓர் ரீங்காரமாக ஒலிக்கிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then