நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்கிறது நல்லுப்பட்டி. மாட்டுவண்டித் தடமே மனிதர்கள் நடந்து செல்லும் பாதையாகக் கிடக்கிறது. பாதையின் இருபுறங்களும் அடிபெருத்து, கிளைபரப்பி வானத்தைத் தொட்டுப் புளியமரங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. மரங்களுக்கிடையில் புங்கனும், பூவரசும், தேத்தாபுளியும் படர்ந்து கிடக்கின்றன. ஊருக்குள் நுழைவதற்கு முன்னால் ஐம்பது ஆட்கள் ஒன்றுசேர்ந்தால் மட்டுமே கட்டியணைக்கக்கூடிய நூறு வருடங்களுக்கும் மேலான ஆலமரம், விழுதுகளோடு விரிந்து நிற்கிறது. இந்த ஆலமரத்தில் குடிகொண்டிருக்கும் பள்ளியம்மனுக்குத்தான் கெடாவெட்டு.
இந்த வருஷமாச்சும் கட்டுவண்டிக் கட்டி, பள்ளியம்மன் கெடாவெட்டுக்குக் குடும்பத்தோட போய்வந்துரனுமுன்னு சட்டிக்குள்ள கெடக்குற நாட்டுக்கோழி கொழம்பாட்டம் கொதிச்சிட்டுக் கெடக்குறாள் பேச்சி. ஆனா பாருங்க விடியற்காலையில வருகிற சூரியன் பொழுது சாயுரதுக்குள்ளறவே போயிடுறது மாதிரியா, ஒவ்வொரு வருஷமும் சாக்குப் போக்குச் சொல்லித் தட்டிக் கழிச்சிடுறான் பேச்சி புருஷன் சோலை.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then