எங்கேனும் தொலைந்து போவது, ஏதேனும் நீர்நிலைகளில் மூழ்கி யாராலேனும் காப்பாற்றப் படுவது எங்கள் பிராயத்தில் எல்லோருக்கும் ஒருமுறையாவது நடந்தேறிவிடும்.
காலையிலேயே அண்ணனும், எதிர்வீட்டு சேகரும் தயாராகிவிட்டார்கள் அம்மா என்னை அண்ணனிடம் ஒப்படைத்து அவனிடம் வழக்கமான அறிவுரைகள் வழங்க, நான் என் புதிய கருநீலக்கலர் பாலிஸ்டர் சட்டையைத் தடவிப் பார்த்துக்கொண்டிருந்தேன். எங்கள் ஊர் இரண்டாவது சந்திப்பில் மாப்பிளையின் ரத்த உறவுகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கார்கள் ஒன்றில் அவர்களோடு கூடவே நானும், அண்ணனும், சேகரும் ஏறிக்கொண்டோம். பெண் வீடு. ஆரஞ்ச் கலரில் ட்ரிங்காவோ, ரஸ்னாவோ ஒரு ஜூஸ் கொடுத்தார்கள். சர்ச்சில் கட்டு முடிந்ததும் அதே வண்டியில் மாப்பிள்ளை வீடு.
பஞ்சுப் பொதிக்குள் அமிழ்ந்ததுபோல் இருந்த அம்பாஸ்டர் காரின் முன்பக்கத்து இருக்கையில் நான் இருந்தபோது என் எடைக்கே சற்று உள்ளே போய்விட்டேன். முன்பக்கக் கண்ணாடி வழி எட்டிப் பார்க்க ஊர் நகர்ந்து கொண்டிருந்தது. டிரைவர் ஸ்டீரிங்குக்கு அடியில் இருந்த லிவரை முன்னும் பின்னும் லாவகமாக இறக்கியும் ஏற்றியும் அவ்வப்போது ஸ்டீரிங் நடுவில் இருந்த ஹாரனை ஒரு விரலால் அமுக்கி ஒலிக்க விடுவதுமாக இருந்தார். மூன்றாவது விலக்கைக் கடந்தபோது எனக்குத் தெரிந்த பையன் வெளியே நடந்து போய்க் கொண்டிருந்தான். நான் காரில் போய்க் கொண்டிருப்பதை அவனுக்குத் தெரிவிக்கும் ஆவேசத்தில் எட்டி கைகாட்ட அடுத்திருந்த பெரியவர், “சும்மா குண்ணையும் வச்சிட்டு கிணாட்டாம இருலே” என்று அன்போடு கண்டித்தார். அதன் பிறகு அதிக அசைவில்லாமல் என்னை ஒடுக்கிக்கொண்டேன்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then