சட்டாப்பய எடுத்து ரெண்டு அடி போட்டாள் கோமதி. மோகனுக்கு அது கொஞ்சமும் உரைத்த மாதிரித் தெரியவில்லை! ஒரு நொடி பயமும் வரத்தான் செய்தது கோமதிக்கு, பயத்தைச் சமாளிக்க கோபத்தை மனம் ஏற்றுக்கொண்டது. மேலும், ரெண்டு அடி அடித்து “என்னடா பழக்கம் இது” என்றொரு சத்தம் போட்டாள். வளர்பிராயத்தின் விடைப்பு மாறாமல் மோகன் அப்படியே நின்றிருந்தான். கோமதிக்கு இப்போது மோகனிடம் இருந்த குழந்தைச் சாயல் எல்லாம் மறைந்து அவனிடம் வேறு யாரோ ஒருவனின் தோற்றம் பெருகிக்கொண்டே போவது போலப்பட்டது. “ச்சீ” என்றவள் கையில் இருந்த புத்தகத்தை மோகன் மீது விட்டெரிந்து, “பரம்பர புத்தி இப்பமே வருதோ” எனும்போது கேசவன் கதவைத் திறந்து உள்ளே வந்தான். அவனை உத்தேசித்து அவள் சொல்லவில்லை என்றாலும் சொல்லிவிட்டாள்.
அப்பாவைக் கண்டதும் மோகன் தன் காலால் கீழே விழுந்து கிடந்த புத்தகத்தை மெதுவாக இழுத்துப் பின்னுக்குத் தள்ளினான். எவ்வளவு லாவகமாக அச்செயல் நடந்தாலும் அதை கேசவனிடம் மறைக்க இயலவில்லை. “படிக்க புக்க என்ன நாயி காலுட்டு இழுக்குத! பின்ன படிப்பு என்ன மயிருல வரும்.” கேட்ட வேகத்தில் செவிட்டோடு ஒரு குடுப்பு விழுந்தது. கேசவன் கத்தும் சத்தம் அடங்கும் முன்னமே இன்னோர் அடி “எடு நாயி அந்தப் புத்தவத்த… ஆளும் மொவறயும்” பொறிப் பறக்க விழுந்த ரெண்டாவது அடிக்குத் தடுமாறி சரியான மோகன் அதே இடத்தில் மீண்டும் அசையாது நின்றான்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then