“அண்மையில் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷ் தொடங்கி பின்னோக்கிச் சென்றால் எண்ணற்ற சாதியப் படுகொலைகளைத் தமிழ்நாடு கண்டிருக்கிறது. நீண்ட நெடுங்காலமாகப் பல்வேறு மாறுதல்களை அடைந்திருந்தாலும் வருண – சாதிப் படிநிலை மாறவில்லை. இது தொடர்பாக வேத எதிர்ப்பு, வேத மறுப்பு தொடங்கி / சாதியெதிர்ப்பு, சாதி மறுப்பு எனத் தொடர் உரையாடல்கள் (தத்துவ – அரசியல்) நம் நாட்டில் நிகழ்ந்திருக்கின்றன. பாபாசாகேப் அம்பேத்கரின் நூற்றாண்டையொட்டி 90களுக்குப் பிறகு அது இன்னும் தீவிரமடைந்தது. மாற்று உரையாடல்கள், மாற்றுச் சொல்லாடல்கள், மாற்றுக் கதையாடல்கள் (வரலாறு) எனப் பலகட்ட வளர்ச்சியைக் கண்ட பிறகும் சாதி – சாதிய ஆதிக்க உணர்வு இன்னும் குறைந்தபாடில்லை. எனில், எழுத்தாளர்களாக – செயற்பாட்டாளர்களாக – இதழியலாளர்களாக நாம் தோல்வியடைந்த புள்ளி எது?
படித்துவிட்டால், நாகரிகமாக வாழத் தொடங்கிவிட்டால், பொருளாதாரத்தில் உயர்ந்துவிட்டால், ‘சுத்தம்‘ ஆகிவிட்டால் எல்லாம் மாறும் என்ற வாதங்கள் இன்று பொய்யாகியிருக்கின்றன. சாதியொழிப்பு கூட வேண்டாம், சாதி நிராகரிப்புக்குக் கூட எதிர் தரப்பினரிடம் (சாதி இந்துக்கள்) உரையாட ஆளில்லை. அதற்கு என்ன செய்யப் போகிறோம்?”
இந்தப் பொருண்மையில் வெவ்வேறு தளங்களில் இயங்கிவரும் நால்வர் பங்குபெறும் கூட்டு உரையாடல் இது. பல்வேறு தத்துவப் பின்னணியில் சாதி இயங்கியல் குறித்துப் புரிந்துகொள்வதற்கான வெளியை இச்சிறு முயற்சி ஏற்படுத்தும் என நம்புகிறோம். இன்னும் விரிவான தளங்களில் இது விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கிறோம்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then