எவ்வளவுதான் விஞ்ஞான வளர்ச்சியை நோக்கி நாடு வளர்ந்துகொண்டே சென்றாலும் ஜாதியின் பெயரால் நிகழ்த்தப்படுகிற வன்கொடுமைகளும் தீண்டாமைக் குற்றங்களும் காலத்திற்கு ஏற்றார்போல் மாற்றமடைந்துகொண்டிருக்கிறதே தவிர சிறிதும் குறையவில்லை; இதன் மூலம் நம் மீதான அநீதிகள் நிரந்தரமாக்கப்படுகிறதே தவிர நிர்மூலமாக்கப்படுவதில்லை; ஆளுகின்ற அரசுகள் இத்தகைய செயல்களுக்குக் கள்ள மௌனம் கொள்கிறதே தவிர நீதிக்காகக் குரலெழுப்பிச் சமூகநீதிக்கு இடம்தருவதில்லை; ஐந்தாண்டுக்கு ஒருமுறை அத்தகையவர்களுக்கே வாக்களிக்கிறோமே தவிர, அந்த வாக்களிப்பில் நமக்கான பங்கீடு என்ன என்பது பற்றிச் சிந்திப்பதில்லை. இதை மாற்றுவதற்கான அடித்தளத்தைக் கட்டமைத்துச் செயல்படாத எந்தவொரு சமுதாய இயக்கமும், சமூகக் குழுவும் தங்களுடைய போராட்டத்தில் தோல்வியடைந்து அழிந்துபோக நேரிடும். ஆக, தலித்திய அமைப்புகளும் – இயக்கங்களும் – செயற்பாட்டாளர்களும் எதுவுமே இங்கு நிலையானதல்ல, நிரந்தரமானதல்ல என்பதை மட்டும் உணர்ந்து விழிப்போடு ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டும். அதோடு அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடிய மாபெரும் புரட்சியையும் வருங்காலங்களில் கரம்கோத்து முன்னெடுக்காமல், ஜாதிய ஒடுக்குமுறைகளில் இருந்தும் தீண்டாமை வன்கொடுமையில் இருந்தும் தங்களை ஒருபோதும் விடுவித்துக்கொள்ள முடியாது. இதைத்தான் நம்மீது தொடர்ந்து நிகழக்கூடிய சம்பவங்களும் உணர்த்திக்கொண்டே இருக்கின்றன.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then