அச்சமற்ற நேரங்களில் கடந்தகாலத்தைப் பற்றிய நினைவுகளை அசைபோடுவதுதான் வயது முதிர்ந்த பாத்திமாவின் பொழுதுபோக்கு. இடது காலை இழந்த அவளின் கணவர் அஹ்மத், மகன் ராஷித் ஆகியோரை வெடிகுண்டின் வெப்பம் முழுதாக விழுங்கிச் சில மாதங்களே ஆகின்றன. இப்போதைக்கு அவளின் இளம் வயது மருமகள் சல்மா, இரண்டு வயது பேரன் யாசின் ஆகியோர்தான் இவளுடைய வாழ்வின் வேர்கள். முகாமின் சிறிய கூடார வாழ்வில் தந்தையைப் பற்றிய நினைவுகள் வராதவாறு தன் மகனைப் பார்த்துக்கொண்டாள் சல்மா. கணவனின் நினைவிலிருந்து சல்மா வெளிவர வேண்டும் என்று பாத்திமா நினைத்தாலும், அவளுக்கான தாயாக இவள் நடந்துகொண்டாலும் கவலையேறிய சல்மாவின் கண்களை மாற்றுவதற்கு பாத்திமாவிற்குக் கடினமாக இருந்தது.
“ஐ.நா. ஆபிசுக்குப் பக்கத்துல நிவாரணப் பொருட்கள் கொடுக்கறாங்களாம். நான் போய் வாங்கிட்டு வருகிறேன். அதுவரைக்கும் நீ மற்ற கூடாரங்களுக்குப் போய் பேசிக்கொண்டிரு” என தன் மருமகளுக்கு பாத்திமா கூறினாலும், இவளுக்கு வேலை கொடுக்காதவாறு “நீங்கள் யாசினைப் பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருங்கள், நான் போய் வருகிறேன்” என சல்மாவே நீண்ட தூரம் நடந்து நிவாரணப் பொருட்களை வாங்கி வருவாள். அதற்கு முக்கியக் காரணம், அவள் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த, நடமாடிய வீதியின் வழியே செல்வதுதான். தீவிரவாத நடமாட்டம் எனக் காரணம் கூறி இங்கே வீதிகள் திடீரென இஸ்ரேல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வரும். அப்போதெல்லாம் அதன் வழியே மக்கள் நடமாட தடைவிதிப்பார்கள்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then