நீள்மனத்தின் வாசனையில் வந்துதிரும் பேரன்பின்
சாலையெங்கும் கிளர்த்துகின்ற செந்நிறப்பூக்கள்
அடர்ந்த கானகத்தின் மென்னொலியில் கேட்கின்றன
அழகிய பறவைகள்
மான்கள் நீரருந்தும் ஓடையின் மறுகரையிலும் அதே பூக்கள்
அடிபெருத்த மரத்தின் வேர்கள் தூர்ந்திருக்கும் அம்மேட்டின்மீது
யாரோ அமர்ந்த தடம் தெரியத் தெரிய
ஒளிபரப்பும் மூலத்தின் கனிகள் தொங்கும் அம்மரக்கிளைகளில்
வண்ணக்கிளிகள் ஊஞ்சலாடுகின்றன
அவற்றின் மொழிகளின் ஆதிச்சொற்கள் உலகின் மூலைகளெங்கும்
விரவவிரவ மகிழ்ச்சித் ததும்பும் தேன்கோப்பையாகிவிடுகிறது பூமி
புதர்கள் சூடிய ஒற்றையடிப் பாதையில் உறைந்து மிளிர்கின்றன
புத்தனின் பாதச்சுவடுகள்.
சொற்கிளிகள்
- யாழன் ஆதி | ஓவியம்: ஆ.அமிர்தலிங்கம்