சென்ற இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி
பகுதி 2
கண்ணனின் அசல் தந்தியில், சாதி இந்துக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினரும் ஒரு கவுன்சிலரும் பற்றிய குறிப்பு இருந்தது என்பதை நினைவுகூருங்கள். அரசாங்கத்தில் யாரும் இந்தக் குற்றச்சாட்டை ஒத்துக்கொள்ளவில்லை – இது அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களின் அடர்த்தியான அடுக்கில் மௌனமாக்கப்பட்டது. இருந்தும் மற்ற வழக்குகளிலிருந்து அறிந்த வகையில், இங்கு அரசியல் நடிகர்களின் ஈடுபாடு விதிவிலக்கல்ல என்பதை நாம் அறிவோம். கிராமப்புறங்களில் நடந்த சாதி வன்முறைச் சம்பவங்களில் அரசியல் கட்சிகளும் அவற்றின் உள்ளூர் தொண்டர்களும் தலித்துகளுக்கு எதிராகப் பக்கபலமாக நின்றனர்.35 இந்தப் பாகுபாடு எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்குமானதாக மட்டும் வரையறுக்கப்படவில்லை, சாதி இந்துக்களுக்குச் சாதகமான இந்தச் சலுகை ஒளிவுமறைவாகவும் பின்பற்றப்படவில்லை. ஒரு இரகசியக் கைகுலுக்கலுக்கு மாறாக, தமிழ்நாட்டில் இந்தக் காலகட்டத்தில் பல அரசியல் கட்சிகள் தாங்கள் யாருடைய பக்கம் நிற்கிறோம் என்பதைப் பகிரங்கமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்பின. உதாரணமாக, 1980இல் தென் ஆற்காட்டில் உள்ள சாத்தனூரில் தலித்துகளுக்கு எதிரான வன்முறை வழக்குக்கு அரசாங்கம் அளித்த பதில் மிகவும் அநியாயமாக இருந்தது, பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் தலையிட வேண்டியிருந்தது. ஆணையம் தலித் குடிமக்களுக்குப் பாதுகாப்பை வழங்கத் தவறியதற்காக மாநிலத்தைக் கடுமையாகக் கண்டித்தது.36 அந்த வழக்கிலேயே, அரசியல் களத்தில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பிரதிநிதிகளும் தொண்டர்களும் – திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் காலனிக்கு எதிரான வன்முறைப் பிரச்சாரத்தில் சாதி இந்துக்களுக்கு ஆதரவளித்தது மட்டுமல்லாமல், தலித்துகள் சரியாகத் தண்டிக்கப்படுவதை(!) உறுதி செய்யுமாறு அரசாங்கத்தைக் கேட்டு ஒரு மனுவில் கையொப்பமிட்டனர், தங்கள் கட்சியின் பெயர்களையும் தங்கள் பெயர்களுடன் தெளிவாக இணைத்தனர்.
இது சத்யவாணி முத்துவின் அரசியல் அதிகாரத்தினது வரம்புகள் பற்றி என்ன வெளிப்படுத்துகிறது? முதலாவதாக, வறுமையில் வாடும் தொகுதிகளே பிரதிநிதித்துவத்தின் நெறிமுறைக் குறிக்கோள்களை அடைவதைத் தடுக்க முடியும் என்பதை இது காட்டுகிறது; பிரதிநிதிகள் செயல்படத் தவறலாம், ஆனால் அதேபோல் முக்கியமாக, வாக்காளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க ஊக்கப்படுத்தப்படாமல் இருக்கலாம். இங்கு நடந்தது போல: கடலூரில் உள்ள காலனிவாசிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஊரில் உள்ளவர்களைச் சார்ந்து இருந்தனர்; வாழ்வாதாரங்களைப் பராமரிக்க தங்கள் அடிப்படை உரிமைகளைத் துறக்கத் தயாராக இருந்தனர்.37 பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான நீதியைக் கோருவதைக் கைவிட்டால், முத்து போன்ற ஒரு பிரதிநிதியால் நீதியைப் பாதுகாக்க முயற்சிக்கக்கூட முடியாது.38

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





