எல்லா அசிங்கங்களையும் புனிதமெனக் கருதும் ஒரு கவிஞன் இருந்தான் எல்லா அசிங்கங்களையும் புனிதமாக்கிவிடும் அந்த மந்திரச்செயல்தான் அசலான கவிஞனுக்குரியதெனப் போகுமிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான் நல்லவேளையாக அவனுடைய ஆதரவாளர்களுக்கு...
குப்பைகளை எரிப்பதற்காக வெட்டிய குழியில் எப்போதோ புதைத்த நாயின் எலும்புகள். துருவேறியிருந்தாலும் கழுத்தெலும்பிலிருந்து பிடி விடாமல் சங்கிலியும். அரிய ஜீவன் அது புத்தியுள்ளது இரவிலிருந்து வீட்டைக் காக்கும்...
நள்ளிரவில் வந்து சேர்ந்தது அந்தச் செய்தி பேனா மரித்துப் போனது பழம்பேனாக்கள் அடர்த்தியாய்க் கசிய குழவிகள் சுவரில் முட்டிக்கொண்டு கிறுக்க மற்றவூர் பேனாக்கள் முனைகளைக் கழற்றி அனுப்பிவைத்தன....
மாட மாளிகைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன அதன் மந்திரக்கதவுகளை உடைத்துக்கொண்டு நீ உள் நுழைகிறாய் பிரமாண்டத்தில் மூச்சுத் திணறுகிறது வாசல்வழி தெரியாமல் மாளிகையின் உள்ளும் புறமுமாய் அலைமோதித் திரிகிறாய்...
ஊருக்குள் அடங்காமல் சற்றே தூரத்தில் எமது சஞ்சரித்தல் மூர்க்கமாய்ப் பேரன்பைப் பிரசவிக்கும் அவ்வாதி பெரும்புலத்தில் அடர்வன நிழலாய்ப் படர்ந்திருக்கிறேன் எங்கள் மூதாதைகள் கையளித்த கதைகளை அறச்சீற்றத்தோடு பண்ணிசைக்கிறேன்...
முதல் முதலாகப் பருகத் தரப்பட்ட முலையில்தான் சதையின் வாசனை அறிமுகமானது எல்லாவற்றிற்கும் முன்பாக எல்லாவற்றையும் விட மூர்க்கமாக. ஒரு மதிகெட்ட மத்தியானத்தில் அவள் ரவிக்கையைப் போர்த்திக்கொண்டு பாலாடையைக்...