கூப்பங்கடை அரசி உண்ட
வயிறுகளுக்கு
விசேச நாட்கள் வந்தால் புரோட்டாதான்
ஊடைநூல் வாங்க சுணக்கம் காட்டும் கால்கள்
களப்புக் கடையென்றால் தறிநாடாவாய் பறக்கும்
பாவு அடசுகிற தினத்தில்
சால்னாவால் வீடே மணக்கும்
காலம் மாறிவிட்டது
வகைவகையாய் வந்த பிறகும்
இப்போது வரை ஊரடைந்தால்
வீட்டார் வாங்கித் தரச் சொல்வது அதையேத்தான்
மகிழ்ச்சியைத் தரும்
மைதாவே
நீ நீடூழி வாழ்க!
] tmani0921@gmail.com




