தினம்
எப்போதும்போல பணிக்கு கிளம்பியாயிற்று. வீதிக்கு வரும்போது என்னைப் போன்றே அனைவரும் அறக்கப் பறக்க இருந்தனர். நடைபாதை நடப்பதற்கே என்ற பதாகையைத் தாண்டி இருசக்கர வாகனங்கள் சர்ரென்று தினசரியும் செல்லும். நடைபாதையில் போய்க்கொண்டிருக்கும் எனைப் போன்ற பாதசாரிகள் வழிவிட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் ஹாரன் அடித்துக்கொண்டே அவுதியைக் கிளப்புவார்கள். பேந்தியான் சாலையின் முக்கில் திரும்பும்போதுதான் பெருச்சாளி ஒன்று உடல் பிதுங்கி கிடந்ததைக் கண்டேன். அதைக் கடந்துசென்று அலுவலகம் புகுந்தேன். அன்றைய அலுவல் முடிந்து பேந்தியான் சாலை முக்கைக் கடக்கும்போது அதே பெருச்சாளி இன்னும் கூடுதலாகப் பிதுங்கி குடல் வெளியில் தெரியக் கிடந்தது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then