தனித் தேவாலயம்

- விக்டர் பிரின்ஸ்

“பத்றோஸ் சாருக்குப் பாலுகாச்ச பாக்கோக்குள்ள யோகம் ஆண்டவரு கொடுக்கலியே…” அலறிய பெரும் அழுகுரல்களை விட கரிமண்காலை சி.ஆர்.ஐ தேவாலயத்தின் வெங்கல மணிச் சத்தமாகக் கதறியது அதை வாங்கிக் கட்டித்தூக்கியவனுக்காக. தேவாலயத்தின் புதிதாக வார்க்கப்பட்ட மேற்கூரைக்கான ஈரம் தோய்ந்து உறுதியான கான்கிரீட்டைத் தாங்கி நிற்கும் சவுக்குத்தூண்களைப் பெயர்த்தெடுக்க வந்த செண்ட்ரி பணியாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

அந்த மரணத்தை ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியரான பத்றோஸ், தனது வாழ்நாள் கனவான ‘கரிமண்காலை சிஆர்ஐ தேவாலயம் கோபுரத்துடன் வானுயர்ந்து நிற்கவேண்டும்’ என்பதைக் காண்பதற்குள் மாரடைப்பில் இறந்தார். அந்த தேவாலயத்தின் ஒற்றை அரசு ஊழியரும் அத்தியாவசியச் செல்வந்தருமான பத்றோஸின் மரணம், புது எழுச்சி பெற்றக் கரிமண்காலை சிஆர்ஐ தேவாலயக் கட்டுமானப் பணிகளைத் தேக்கநிலைக்குத் தள்ளுமோ என அனைவரும் பயந்தனர்.

எண்பது ஆண்டுகாலப் பாரம்பரியத்தைக்- கொண்ட அந்த தேவாலயம், சமீபத்தில்தான் ‘ஓலப்பெர சர்ச்’ என்ற பெயரைத் தகர்த்தெறிந்து புதுப் பாய்ச்சலுடன் ஆலயம் கட்டும் தீவிரத்தில் இறங்கியிருந்தது. வாங்கப்பட்ட ஆணிகள் முதல் பெயர்த்தெறிந்து அடுப்புகளில் கரிந்த ஓலைகள் வரைக்கும் பத்றோஸின் பாக்கெட்டிலிருந்து நகர்ந்த பணத்தில் தேவாலயத்திற்காக வந்திருந்தன. அனைத்துக்கும் பத்றோஸின் உளப்பூர்வமான இறைநம்பிக்கைதான் காரணம். ஆலயத்திற்கு வருகின்ற விசுவாசிகள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள். குமரி பேராயத்தில் உள்ள சிஆர்ஐ தேவாலயங்கள் பிரமாண்ட வடிவில் வானுயர்ந்த கோபுரங்களுடன் மிரட்டலாக நிற்கையில், கரிமண்காலை தேவாலயம் ஓலைச் செற்றையிலும் பல வருடங்களுக்குப் பிறகு ஓட்டுக்கூரைக்கு மாறியும் அடையாளத்தைக் காட்ட மனமின்றிக் கூனிக்குறுகி நின்றிருந்தது. நாகர்கோவிலில் நவீன ராஜாவுக்குரிய அரண்மனை போன்ற பிஷப் அலுவலகத்தின் சுகந்தமும் பளபளப்பும் கரிமண்காலை தேவாலயம் தங்களுக்கானது என்பதை மறந்தே பேராய ஆவணங்களைப் புரட்டிக் கோடிகளின் மாத வருமானத்தைச் சலித்தது. சிஆர்ஐயின் குமரி பேராயம் நடத்துகின்ற தேவாலய மாணவர்களுக்கான போட்டிகளில் கரிமண்காலை மாணவர்கள் கலந்துகொள்ளவே கூச்சப்பட்டார்கள். பேராயத்திலே திறமையற்றவர் என அறியப்பட்டு, எந்த ஆலயமும் ஏற்க முன்வராத போதகர்களையே கரிமண்காலைக்கு அனுப்பினார் பிஷப். எந்த எதிர்ப்புமின்றி அந்தப் போதகர்களை ஏற்றுக்கொண்டனர் கரிமண்காலை விசுவாசிகள்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!