ஒரு கலைஞனைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு அவரது பின்புலத்தை அறிவது முக்கியம். குறிப்பாக, கலையில் ஈடுபடுபவர்களுக்குப் பரம்பரைப் பின்புலம் இருக்கும் அல்லவா? அப்படி உங்களின் முன்னோர்கள் குறித்தும் கலையோடு அவர்கள் கொண்டிருந்த தொடர்பு குறித்தும் விரிவாகச் சொல்லுங்கள்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்தான் நான் பிறந்து, வளர்ந்த ஊர். இந்த ஊரில் ஊர் வேலை செய்பவர்கள் எனது பங்காளிகள், தோட்டிப் பறையர்கள். அலங்காநல்லூரின் பூர்வீகக் குடிகள். அலங்காநல்லூர் முனியாண்டி கோயில்ல பூசாரி எங்க பங்காளிகதான். நாங்க அம்மி வகையறா. அதாவது, கோயில் திருவிழா காலங்களில் அம்மிய வரிசையா போட்டிருப்போம். எங்க அம்மியில்தான் அத்தன சாதி சனமும் மசாலா அரைக்கும். எங்க பங்காளிக, ஊரில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் பங்கெடுத்துக்கொள்வார்கள். கோயில் திருவிழா, இறப்பு மற்றும் எந்த விசேசமானாலும் அவர்கள்தான் வாசிப்பார்கள். அந்தக் காலகட்டங்களில் என்னுடைய ஐயா ‘சைடு ட்ரம்‘ வாசித்துக்கொண்டிருந்தார். அதாவது என் அப்பா இராமையா. நாங்க அப்பாவ ஐயானுதான் கூப்பிடுவோம். ஐயாவுக காலத்திலேயே ஒரு குழுவாக இணைந்து செயல்பட ஆரம்பிச்சிட்டாங்க. பிறகு, அண்ணன் மலைச்சாமி, சேவுகன் தாத்தா எல்லாம் இணைந்து ‘அம்பேத்கர் கலைக்குழு’னு ஆரம்பிச்சிட்டாங்க. இந்தக் குழுவுல எங்க ஐய்யாவும் இடம்பெற்றிருந்தார். இந்தக் குழுவோடு எனக்குச் சிறு வயதிலேயே பழக்கம் ஏற்பட்டது. அப்ப எனக்கு வயது பதினொன்னு. எனக்குப் படிப்பே வராது. ஒண்ணாவதில் ஒரு வருஷம் பெயில். இரண்டாவதில் இரண்டு வருஷம் பெயில். மூணாவது பாஸ். நாலாவதில் திரும்பவும் இரண்டு வருஷம் பெயில். நாலாவது வகுப்பில்தான் க, காவே எழுதக் கற்றுக்கொண்டேன்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then