“டெவில்!”
கார் ஸ்டியரிங்கின் மீது கைகளை இறுகப் பற்றியபடி தமயந்தி கூறினாள். மழை வழிந்துகொண்டிருக்கும் முகப்புக் கண்ணாடி வழியாக ஒருமுறை நான் தழைந்து பார்த்துவிட்டு பெருமூச்சுடன் புன்னகைத்தேன். அவளது கண்கள் அச்சத்தில் சிமிட்ட மறந்து உறைந்திருந்தன. கார் நின்றிருந்த இடத்திலிருந்து நேரெதிரே அந்த வீடு கிடந்தது. சுற்றிலுமிருந்த இருளைக் கிழித்தபடி முகப்பு வெளிச்சம் ஒரு கரத்தைப் போல அந்த வீட்டைத் தொட்டுக்கொண்டிருந்தது. மிகப்பழைய ஓட்டு சாய்ப்பு வீடு. நான் இங்கு வருவதை மறந்துவிட்ட இந்தச் சில பத்து வருடங்களில் இன்னமும் குலைந்திருந்தது. அதன் தலைக்கு மேலே பிரமாண்டமான ஆலமரம் வீட்டுக் கூரையைப் பிளந்து வளர்ந்து நின்றிருந்தது. ஆல் இறங்கிய வீட்டைப் பார்த்திருக்கிறீர்களா? கண்ணுக்கே தெரியாத துகளாக ஆலமரத்தின் விதையொன்று காற்றில் மிதந்து இறங்குகின்ற வீட்டில் மெல்ல மெல்ல மனிதர்கள் மறைகிறார்கள். மனிதர்கள் நடமாடாத வீட்டில் ஆல் துளிர்க்கத் துவங்கும்போது நிறைமாதக்காரியின் இடுப்பு எலும்புகள் நெகிழ்வதைப் போல வீட்டின் செங்கல்கள் வழிவிடுகின்றன. ஆல் கிளைத்து மேலேறிப் படர்கின்ற வீட்டைப் பார்ப்பது ஒரு வேட்டைக்காட்சியைப் போலவே இருக்கும். வீட்டுச்சுவர் முழுக்க வழிகின்ற வேர்களோடு ஆலமரம் படமெடுத்து விரிந்திருக்கும் வீட்டிற்கு, பார்த்தவுடன் உணரக்கூடிய ஒரு வரலாறும் இருக்கும்.
முழுவதும் நீர் வழிகின்ற உடலோடு யானைத்தொடை கிளைகளோடு எனது பூர்வீக வீட்டைச் சுற்றி மேலேறி நின்ற ஆலமரத்தை, அதன் முதல்விதை விழுந்த தருணத்தை நான் அறிவேன்.
மன்னாடிமங்கலத்திலிருந்து மதுரைக்கு தினசரி வேலைக்குச் சென்று வருபவர்கள் வெகு சொற்பமாக இருந்த நேரத்தில், அப்பா அரசுவேலைக்குப் போய்விட்டு மாலைவேளையில் மடித்துவைக்கப்பட்ட தினசரியோடு வீடு திரும்புபவராக இருந்தார். கோடையிலும் முழங்காலளவு தண்ணீர் வைகையில் ஓடிக்கொண்டிருக்கும் வைகையினால் மன்னாடிமங்கலம் முழுக்கவே இளநெல்லின் வாசம் எப்போதும் வீசிக்கொண்டிருக்கும் மதியங்களில் நானும் அம்மாவும் வீட்டுவேலைகளைப் பங்கிட்டுச் செய்துகொண்டிருப்போம். அப்பாவிற்கு ஊருக்குள் ஊமைத்துரை எனச் செல்லப் பெயர். அங்கேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் ஒருவரிடமும் சகஜமாகப் பேசத்தெரியாத மனிதர். வேலை முடிந்து வந்த மாலைகளில் அவருக்குச் செய்வதற்கு எதுவுமே இருக்காது. வாசலில் அமர்ந்து காலையில் வாசித்த தினசரியில் திரும்பவும் வரி விளம்பரம் விடாமல் படித்துக்கொண்டிருப்பார். அம்மா எனக்கு மட்டும் கேட்கும்படி, “அடைகோழி” என இனிந்து சலித்துக்கொள்வாள். அப்பா பெரும்பாலும் இதுபோன்ற கேலிகளில் கூட கலந்துகொள்வதில்லை. தென்னந்தோப்புகளின் மீது படர்ந்து வருகின்ற இருளை வெறுமனே பார்த்தபடி இருப்பார்.]/blur]
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then