‘சூசுவானு வீட்டுல கெடக்கமாட்டாம, நல்லா கத கேக்கப் போறேங் கழுதய மேய்க்கப் போறம்னுட்டு நைட்டெல்லாங் ஒழுங்கா ஒறங்காமப் பொலம்பிக்கிட்டுக் கெடந்த தெரியுமா?” என்று ஆச்சி சொல்லும்போது மடக்குக்கட்டிலில் இருந்து அப்படியே எழுந்து அமர்ந்தான் சிவா. ஊமைக் கனவுகள் குழையும் நீட்டமான ராத்திரியில் இருந்து இன்னும் அவன் முழுதாக வெளியே வரவில்லை. பாக்கியராசு கடையில் குண்டு முட்டைக்கோஸ் கேக்கை பொட்டனம் போட்டுக் கொடுப்பதுபோல போர்வையைச் சுருட்டி மடியில் வைத்துக்கொண்டான்.
“பச்சத்தண்ணியா ஆத்தி வச்சு ஆட விழுந்து போச்சு” என்று சொல்லிக்கொண்டே கட்டில் மாட்டில் உக்காந்துகொண்டு ஆச்சி நீட்டிய பூஸ்டை வாங்கி ரெண்டு மடக்குக் குடித்ததும் ஆள் கொஞ்சம் சுதாரிப்பானான். சிவாவுக்கு இப்போது அரையாண்டு லீவு. “நாலாப்பு” படித்துக்கொண்டிருக்கிறான். யாரும் கேட்டால் “போர்த்” என்பான்.
“என்னென்ன மணியமெல்லாங் பண்ணிக்கிட்டுத் திரியுத, இதே அங்கன்னா பல்லு வௌக்காம ஒரு மடக்குக் குடிச்சுருவியா” கிட்டத்தில் வந்து ரகசியம் போலக் கேட்ட ஆச்சிக்கும் சிரிப்பு. “ஆமா” என்று தலையாட்டிய சிவாவுக்கும் சிரிப்பு. உடனே மேலும் சுதாரிப்பாகி பாதி குடித்த கிளாசைக் கையில் வைத்துக்கொண்டு,
“எப்புடீ” என்று தலையை ஆட்டினான்.
“எய்யா நல்லாருப்ப சாமி! மொத மிச்சம் வைக்காம முழுசா குடிச்சு முடி. அதுங்குள்ள ஒனக்கு ஏழு புத்தி மாறுமே.” உடனே நல்ல புள்ளை போல மடமடவென்று குடித்து டம்ளரை நீட்டினான்.
“யாத்தே! அதிசயந்தாங்! ஊஞ்… ஞாங்னு ராத்திரியெல்லாங் வாய்க்குள்ளயே மொனங்கிட்டுக் கெடந்த”
“யாரு நானா?” முட்டைக் கண்ணை உருட்டிக் கொண்டு ஆச்சரியமாகக் கேட்டான் சிவா.
“பின்ன யாரு? என்னத்தயோ மொனங்குத மாரி இருக்கேனு பாத்தா கதவு, நெஞ்சுனு சொல்லிட்டுக் கெடக்க! நெஞ்சுங்கவும் எனக்கு என்னமோ, ஏதோனு பதறிப்போய் ஏல என்ன என்னனு உசுப்புனதும் – ‘டிங்’னு முழிச்சுப் பாத்து ஒன்னுமில்லனு சொல்லிட்டுத் தூங்கீட்ட”
“எனக்கு யாவகமே இல்ல! நெசமாவா?”
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then