ஒயின்

சிவசங்கர்.எஸ்.ஜே

“டேய் அப்பா தவறிட்டாங்க. அதான் ஊருக்கு வந்திருக்கேன். இன்னிக்கு பதினாறாம் நாள் சடங்கு. உனக்கு இப்ப தேவலையா ?”
“என்னாச்சுடா கருப்பு. ஏதாவது உடம்பு கிடம்பு சரியில்லாம இருந்தாரா ?”

“ஆமாடா டி.பி”

“எங்கடா பாத்தீங்க?”

“தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜிலதான் ட்ரீட்மென்ட். அஞ்சு வருஷம் முன்னாடி இருந்தே இருக்குடா. டேய் ஒரு நிமிஷம். நான் சாயந்திரமா கூப்பிடட்டா?”

“சரிடா…”

கருப்பசாமி கல்லூரியில் உடன் படித்த நண்பன். ஒரத்தநாட்டில் அவர்களது வீட்டின் வெளியே என்னைப் பார்த்து வாங்க தம்பி என்று அழைத்த அவரது முகம் நினைவில் வந்து மறைந்தது. கல்லூரி நட்புகளில் அவனோடு மட்டுமே தொடர்பிருந்து வருகிறது. அவனது தங்கை கல்யாணத்துக்கு இரண்டு நாட்கள் முன்னமே போயிருந்தேன். நான்கு வருடக் கல்லூரி நாட்களில் அவன் வீட்டுக்கு எங்களை அழைக்காததன் காரணம் அவன் வீட்டில் இறங்கிய அடுத்த நாள் தெரிந்துவிட்டது.

ஊருக்கு வந்து இறங்கியபோது கருப்பு என்னை எங்கேயும் உட்கார விடவில்லை. ஒரத்தநாடு பஸ்டாண்டிலிருந்து வெள்ளூர் போகும் வழியில் அவன் கிராமம். தஞ்சாவூரில் அல்லது ஒரத்தநாட்டில் ரூம் போட்டுடலாமா என்றான். நான் மறுத்து வீண் செலவு வீட்டுக்குப் போவோம் என்றதும் தட்ட முடியவில்லை. கல்லூரிக் காலங்களில் இரண்டுமுறை எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான். அதனாலும் அவனால் மறுக்க முடியவில்லை. நான் வந்து இறங்கியதிலிருந்து பதற்றமாகவே அலைந்தான். அவனது இயல்பு மீறிய நடத்தையினால் ஒருவேளை என் வருகை பிடிக்கவில்லையோ என்று முதலில் நினைத்தேன். ஆனால், அவனது அசௌகரியங்களுக்கு விடை வீட்டுக்குப் போனதும் கிடைத்தது. சின்ன குடிசை வீட்டிலிருந்து அப்பா வெளியே வந்தார். அறிமுகப்படுத்தினான். ஒருவேளை இதுதான் சங்கடப்படுத்தியிருக்குமோ என்று நினைத்துக் கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன். ஆனால் என்னை அவன் அறிவான். போதாதுக்கு இப்போது புது வீடு வேறு. எனக்கு விளங்கவில்லை.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger