உங்களால் ஒட்டுமொத்தமான ஏற்றத்தையும் பார்க்க முடியவில்லை என்றாலும், நம்பிக்கையைக் கொண்டு முதல் அடியினை எடுத்துவையுங்கள்”
– மார்டின் லூதர் கிங் ஜூனியர்
ஆப்பிரிக்க வம்சாவளியினரின் துணை இல்லாமல் அமெரிக்கப் பேரரசு இத்தனை தூரம் முன்னேறியிருக்க முடியாது என்பதே வரலாற்று உண்மை. இதை மறைக்கவே வெள்ளை இன அடிப்படைவாதிகள் காலம் முழுக்க வெறுப்போடு போராடுகிறார்கள். கடந்த பல நூற்றாண்டுகளாக அமெரிக்க மண்ணில் ஆப்பிரிக்கர்கள் எதிர்கொண்ட அவமானங்கள், முரண்பாடுகள், எரிச்சல்கள், உயிர்ப்பலிகள், உரிமையின்மைகளை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. நம்பிக்கை இழக்கின்ற காலகட்டம் என்பது அமெரிக்க மண்ணில் இருக்கும் கறுப்பின மக்களுக்கு நிரந்தர மனநிலையாக இருந்தது. இவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே தலைவர்கள் உருவானார்கள்; போராட்டங்கள் நடந்தன; இசைக்குழுக்கள் தங்கள் பங்குக்குப் பெரும் நம்பிக்கையைத் தந்தன; திரைப்பட இயக்குநர்கள் உருவானார்கள்; தொழிலதிபர்கள் பெரும் போராட்டத்துக்குப் பின்னர் அமெரிக்காவில் தொழில் தொடங்கினார்கள். மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் பல மடங்கு உழைக்க வேண்டியிருந்தது.
இந்த மாற்றங்களும் கூட உடனடியாக நடந்துவிடவில்லை. அங்கங்கு பல்வேறு போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. இதன் மிகப்பெரும் தாக்கமாக அமைந்தது சட்ட உரிமை இயக்கம். அமெரிக்கா முழுவதும் வாழ்ந்த கறுப்பின மக்களை இந்த உரிமைப் போராட்டம் ஒன்றிணைத்தது. ஒற்றுமையே பலம் என்று கறுப்பின மக்கள் உலகுக்கு நிரூபித்த தருணங்கள் அவை. இப்போராட்டத்துக்கு முன் பின் எனக் கறுப்பின மக்களின் வாழ்க்கை முறையைப் பிரிக்கலாம். இவற்றைக் குறித்துப் பல்வேறு ஆவணப்படங்களும் திரைப்படங்களும் வெளியாகின; வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஓர் ஆவணப்படம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. கறுப்பின மக்களுக்கு இதைப் போல் நம்பிக்கை ஏற்படுத்திய ஓர் ஆவணம் கிடைத்ததில்லை. அப்படத்தின் பெயர் Becoming.
சட்டவுரிமைப் போராட்ட வெற்றிக்குப் பிறகும் கூட ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அதிகார மையத்தில் அமர முடியும் என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் அது நடந்தது. போராட்டங்களை முன்னெடுக்கும் தலைவர்களிலிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் தலைமை உருவானதை இந்த நூற்றாண்டில் அமெரிக்கா பார்த்துவிட்டது. அதற்குக் கிடைத்த வரவேற்பையும் குறிப்பிட்டாக வேண்டும். எட்டாண்டுக் காலம் அதிபராக இருந்த பராக் ஒபாமா பதவி விலகியபோது ‘மீண்டும் வாருங்கள்’ என்று மக்கள் கூக்குரல் எழுப்பினார்கள், அழுதார்கள். ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வெள்ளையின அமெரிக்கர்களும் ஒபாமாவை அழுதபடி அனுப்பி வைத்தார்கள். அதன் பின்பு திரு & திருமதி ஒபாமா அவர்களின் வாழ்க்கையைக் கூர்ந்து கவனிக்கவும் தொடங்கினார்கள். அதன் வெளிப்பாடே இந்த ஆவணப்படம்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then