‘நம்நாட்டில் வெளிவந்துகொண்டிருந்த செய்தித் தாள்களின் போக்கு எப்போதும் அம்பேத்கருக்கு விரோதமாகவே அமைந்திருப்பது வழக்கம்’ என்று டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூலையும், அவருடைய எழுத்துகளையும் தொகுத்த வசந்த் மூன் குறிப்பிடுகிறார். ‘அம்பேத்கர் ஊடகத்திற்குப் பரிச்சயமானவர் அல்லர்’ என்று அம்பேத்கருடைய உதவியாளரும் அவருடைய எழுத்துகளையும் பேச்சுகளையும் முதலில் தொகுத்து வெளியிட்ட ஆய்வாளருமான பகவான்தாஸ் பதிவுசெய்கிறார். மராத்திப் பத்திரிகைகள் மட்டுமல்லாது பிற பத்திரிகைகளிலும் அம்பேத்கர் எப்போதும் புறக்கணிக்கப்பட்டேயிருந்தார். அவரைப் பற்றி அவ்வப்போது வெளியான செய்திகளில் ஏளனமும் அம்பேத்கர் எனும் தனித்த ஆளுமையையும் அவருடைய செயற்பாடுகளையும் மறுக்கும் தொனியும், அவர் செய்வதெல்லாம் தவறு என்னும் போக்கும் காணப்பட்டன. வட்டமேசை மாநாட்டிற்குப் பிறகுதான் ‘வழியனுப்பு விழா, வரவேற்பு விழா’ எனப் பல்லாயிரம் தொண்டர்களாலும் பத்திரிகையாளர்களாலும் அம்பேத்கர் கொண்டாடப்பட்டார் என தனஞ்செய்கீர் குறிப்பிடுகிறார்.
பத்திரிகைகள் அவரைத் தொடர்ந்து அவமதிப்பு செய்துகொண்டேயிருந்தாலும் தன்னைப் பற்றிய எத்தகைய மதிப்பீடுகளை ஜாதி ஹிந்து பத்திரிகைகள் கொண்டிருந்தாலும் அப்பத்திரிகைகளைத்தான் தம் மக்களின் பிரச்சினைகளுக்கான உரையாடும் களமாக அம்பேத்கர் பார்த்தார். ஒடுக்கப்பட்ட சமூகம் முன்னேறுவதற்கான செய்திகளை வெளியிடுவது அல்லது விவாதிப்பது பத்திரிகையின் வேலை என்பதாகக் குறுக்கிக் கொள்ளாமல் சமூக, அரசியல் விவாதங்களை மக்களிடத்தில் முன்வைத்தல் என்னும் அளவிலும் மக்களுக்கும் அரசாங்கத்திற்குமான இணைப்பை உருவாக்குவது என்கிற வகையிலும் செய்தித்தாள்களை ‘ஜனநாயக அமைப்பின் அடிப்படையான அங்கமாகவும் நல்ல அரசாங்கத்திற்குரிய அடையாளமாகவும் மக்களுக்குக் கல்வி புகட்டுவதற்குரிய கருவியாகவும் இருக்கும்’ என அம்பேத்கர் பார்த்தார்.
பத்திரிகைகள் வழியாக மக்களைப் பொறுப்புணர்வோடு கேள்வி கேட்பவர்களாகப் பயிற்றுவித்தார். இம் முயற்சியில் எந்தளவில் வெற்றி பெறுவோம் அல்லது எந்தெந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் (அ) கிடைக்காது என்பதைத் தாண்டி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் எந்தளவில் தங்களுடைய பணிகளைச் செய்ய முடிந்திருக்கிறது, எது முடியவில்லை என்பன குறித்த விவாதப் பகுதிகளைப் பத்திரிகைகள் வெளியிட வேண்டும் என பீப்பிள்ஸ் ஹெரால்டு பத்திரிகையின் தொடக்க விழாவில் பேசினார். தம்முடைய ‘அரசியலுக்கான நீதி’ என்ன என்பதைத் தீர்மானிக்கக் கூடியவர்களாக மக்களையே மையப்படுத்துகிறார். அதே நேரத்தில் சமகால ஊடகங்கள் எப்படி இயங்குகின்றன என்பதைக் குறித்த விமர்சனத்தையும் அவர் மறக்கவில்லை.
‘இந்தியாவில் ஊடகம் என்பது ஒரு காலத்தில் தொழிலாக இருந்தது. தற்போது வணிகமாக மாறிவிட்டது. சோப்பு தயாரிப்பவரிடம் இருக்கும் நேர்மையைக் கூடக் கொண்டிருக்கவில்லை. பொது மக்களுடைய பொறுப்பான ஆலோசகராகவும் தன்னை அது கருதவில்லை.’
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then