வாப்பாவின் வலது கால் பாதத்தில் ஆணி ஏறியதிலிருந்து தொடங்கிய நடுக்கம். ஆற்றின் மேற்பரப்பில் மிதக்கும் நீர்வட்டம்போல வீட்டில் உள்ள எல்லார் மனத்திலும் ஒரு பதகளிப்பு. காலில் அணிந்திருந்த பாதணியையே குத்திக் கிழித்துத் தோலைப் பதம் பார்த்திருந்தது ஆணி. வாப்பா வலி பொறுக்காமல் முனகிக்கொண்டிருந்தார். வாப்பாவின் முனகலையும் மீறி ஒலித்தது மற்ற எல்லாரது புலம்பல்களும்.
எவ்வளவு சொல்லியும் கேளாமல் வெளியேறிப் போய் காலில் ஆணியைக் குத்திக்கொண்டு வந்துவிட்டதாகப் புலம்பும் உம்மாவின் குரல் கூரையைக் கிழித்துக்கொண்டிருந்தது.
“எல்லாம் அந்த நரகல் பழக்கந்தான் காரணம். ஒரு நாள் சிகரட் இல்லாட்டி என்ன ஆயிடப்போகுது ஹா….”
“குமருப் புள்ளைகள் குழந்தைப் புள்ளைகள் இருக்கிறதைப் பத்திக் கொஞ்சமாவது யோசனை இருக்கா இந்த மனுசனுக்கு? யாரைப் பத்தியும் ஒரு அக்கறையுமில்ல… தான் மட்டும் சந்தோசமாக இருக்கணும்.”
“இப்ப எதுக்குக் கிடந்து கத்துறாய்? நானே நோவு தாங்கேலாமல் கிடக்கேன்….”
“அவ்வளவு சொன்னோமே, கேட்டீங்களா? பொம்பிளை சொல்லிக் கேட்கிறதா என்டுதானே திமிராப் போனீங்க…”
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then