பத்துத் தல ராவணனா, பத்து ராவணனா?

- ராஜன்

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே... என்ற பாடல் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதில் ரஜினி ஸ்டைலாக நடனம் ஆடியிருப்பார். இந்தப் பாடலே முதன்முதலில் ராமனையும் ராவணனையும் எனக்கு அறிமுகப்படுத்தியது. பின்பு எனது பள்ளிப் பருவங்களில் இந்துப் புராணக் கதைகள் மீதும் அதில் வரும் கிராபிக்ஸ் மீதும் எனக்குத் தீவிரக் காதல் இருந்தது. டிடி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய மகாபாரதம் முதல் ஸ்ரீ கிருஷ்ணா வரை அனைத்து புராணக் கதைகளையும் பார்த்து ரசித்துள்ளேன். அதன் வழியே இந்துப் புராணக் கதைகளைத் தெரிந்துகொண்டேன்.

அந்தப் பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சித் தொடர் ஜெய் அனுமான். அதில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் வாலி. காரணம் அவனுடைய வலிமையும் அந்தக் கதாபாத்திரத்திடம் இருக்கும் ஏதோ ஒருவகையான ஈர்ப்பும். அது ஏனோ அந்தச் சிறு வயதில்கூட எனக்கு ராமனைப் பிடிக்கவில்லை. அவ்வளவு ஏன், அந்தத் தொடரின் கதாநாயகனான அனுமானைக்கூடச் சுத்தமாகப் பிடிக்காது. என்னைப் பொருத்தவரை ராமன் ஒரு ஜெமினி கணேசன். என்னைப் பொருத்தவரையில் ராமாயணத்தில் ஹீரோ யார் என்றால் அது வாலிதான், ராவணனும் அப்போது எனக்கு வில்லன்தான். என்னுடைய முதுகலைப் பட்டப்படிப்பின் ஆய்விற்காக ராவணனைப் பற்றி ஆழமாகப் படிக்க நேர்ந்தது. சற்று முதிர்ச்சியடைந்துகொண்டிருந்த என் மூளைக்கு ராவணனின் அருமை அப்போதுதான் புரிய ஆரம்பித்தது.

(இரா+வண்ணன்) கருமையான நிறம் உடையவன். ராவணனைப் பற்றிப் பலவிதமான கதைகள் இருக்கின்றன. பல பழங்குடிப் பாடல்களில் ராவணன்தான் கதாநாயகன். மய்ய நீரோட்டப் புராணக் கதையான வால்மீகி ராமாயணத்தில் ராவணன் ஒரு கொடூரமான அரக்கனாகவே சித்தரிக்கப்பட்டிருப்பான். ஆனால், கம்பர் ராவணனைக் கற்றறிந்த சான்றோனாகவும் வீணை வாத்தியத்தில் வல்லவனாகவும் காண்பித்திருப்பார். கம்பனைப் பொருத்தவரை அவன் செய்த ஒரே தவறு தன் தங்கைக்காகப் பழிவாங்க நினைத்துப் பின் சீதையின் வருணிக்கப்பட்ட அழகின் மீது காமுற்று அவளைக் கடத்தியதுதான். இந்தியாவின் ராமாயணங்கள் ராவணனை இப்படிக் கூற, ஆசியாவின் பல பகுதிகளில் சின்னச் சின்ன மாற்றங்களுடன் ராவணன் பேசப்படுகிறான்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!