நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகும் இந்த நினைவுகள் எனது ஊரில் உள்ள மூத்தவர்கள் மற்றும் எனது பெற்றோர், சில உறவினர்கள் மூலம் ஒவ்வொரு நாளும் எனக்குச் சொல்லப்பட்டவை. சில நான் சிறுவனாக இருந்து நேரடியாகப் பார்த்தவை. இது கீழத்தஞ்சையின் நூறாண்டு கால நினைவுகள். இதைத் தஞ்சையின் எந்த மூத்த எழுத்தாளரும் தங்களது பிரதிகளில் மனம் திறந்து பேசவில்லை. கூலிப்போராட்டம் குறித்து எழுதியிருக்கும் சில இடதுசாரித் தோழர்கள் கட்சியின் அறிக்கையில் சில பத்திகளில் சொல்லி முடித்துவிட்டார்கள்.
தஞ்சாவூரை, சோழர்கள் தொடங்கி பாண்டியர்கள் ஈறாக ஆங்கிலேயர்கள் வரை பல்வேறு கலாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். ஆனால் அதன் தாக்கம் சில காலங்கள் இருந்திருக்கலாம். ஆட்சி, அதிகாரம் மாறியபோது அதன் பாண்பாட்டு அடையாளங்களும் மாறிப் போய்விட்டன. இராசராசன் ஆட்சிக் காலத்திலே சோழநாட்டில் ஆண்டான் – அடிமை முறை இருந்து வந்துள்ளது. அது நீண்டகாலம் ஆட்சி புரிந்த ஆங்கிலேய ஆட்சியில்தான் கல்வியறிவு படைத்த சில குறிப்பிட்ட சமூகங்களின் கைகளுக்குப் போனது. அவர்கள் நிலங்களைத் தன்வயப்படுத்தித் தங்களைப் பதக்குகள் என்று அழைத்துக்கொண்டனர்.
காலப்போக்கில் இது நிலவுடமைச் சமூகமாக உருவாகிறது. அவர்கள் ஆங்கியே ஆட்சிக்கு ஆதரவாக இருந்து அதன் ஆட்சி அதிகாரங்களில் பணியாற்றிய பகதூர்களாக ஆனார்கள். பெரும் நிலங்களைக் கொண்டவர்கள் வீரம் செறிந்த ஜமீன்களாகத் தங்களைக் கூறி தக்கவைத்துக் கொண்டார்கள். சிலர் பெரும் பண்ணைகளாக முடியாட்சியில் இருந்து மக்களாட்சியிலும் கோலேச்சினார்கள். காங்கிரஸ் கட்சியில் பலம் வாய்ந்த தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனாருக்குக் கபிஸ்தலம் தொடங்கி திருவையாறு, கும்பகோணத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருந்தன. மேலத்தஞ்சையில் அவருக்குச் சாகுபடி முடிந்தால்தான் காவிரி நீரை கீழத்தஞ்சையான வெண்ணாறுக்கு விடுவார்கள். அதுவரைக் காத்திருக்க வேண்டும். அவரைப் போல சில நிலக்கிழார்கள், மேலத் தஞ்சை முழுவதும் நிரம்பி வழிந்தார்கள். அவர்களை எதிர்த்து ஒரு வார்த்தை பேசினாலும் உயிரோடு விட மாட்டார்கள்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then
[/arm_restrict_content]